சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு

கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில், அத்தொகுதியின் தி.மு.க., எம்.எல்.ஏ. நா. கார்த்திக் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

கோவை, ஜனவரி 22

கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில், அத்தொகுதியின் தி.மு.க., எம்.எல்.ஏ. நா. கார்த்திக் திடீரென ஆய்வு மேற்கொண்டார். 



சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை, தேனி உள்ளிட்ட பல ஊர்களுக்குப் பேருந்துகள் இயக்கப்படுவதால், நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில், இந்தப் பேருந்து நிலையத்தை அத்தொகுதியின் தி.மு.க., எம்.எல்.ஏ. நா. கார்த்திக் திடீரென ஆய்வு மேற்கொண்டார். பேருந்து நிலையத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள காவல் உதவி மையம், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு முறையாக கண்காணிக்கப்படுகிறதா..? என ஆய்வு நடத்தினார். மேலும், தாய்மார்கள் பாலூட்டும் அறை மற்றும் இருக்கைகளும் முறையாக பயன்பாட்டில் உள்ளதா என அவர் பார்வையிட்டார். 

இந்த ஆய்விற்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் போதிய வசதிகள் செய்யப்படவில்லை. பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளன. இது தொடர்பாக காவல்நிலையத்தில் பலமுறை புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், பேருந்து நிலையத்திற்கு வெளியே தோண்டப்பட்ட குழி இன்னும் மூடவில்லை. இதனால், பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளாவதுடன், விபத்துகள் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. 

திருச்சி சாலை வழியாக ஜி.வி. ரெசிடென்சி செல்லும் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகக் காணப்படுகிறது. மேலும், சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தை தனியார் பேருந்துகள் ஆக்கிரமிப்பு செய்வதால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதுபோன்ற பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்காவிடில், பொதுமக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவோம். என்றார். 

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...