வரும் 24-ம் தேதி ”இ-பில் ஜிஎஸ்டி” முறை குறித்து விளக்கக் கருத்தரங்கு

”இ-பில் ஜிஎஸ்டி” முறை குறித்த விழிப்புணர்வு ஏற்படும் வகையில், கோவையில் வரும் 24-ம் தேதி விளக்கக் கருத்தரங்கு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவை, ஜனவரி 22

”இ-பில் ஜிஎஸ்டி” முறை குறித்த விழிப்புணர்வு ஏற்படும் வகையில், கோவையில் வரும் 24-ம் தேதி விளக்கக் கருத்தரங்கு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

உள்மாநில சரக்கு போக்குவரத்து வசதிக்காக ”இ-பில் ஜிஎஸ்டி” முறை பிப்ரவரி 1-ம் தேதி முதல் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த இ-பில் ஜிஎஸ்டியைப் பதிவு செய்துவிட்டால், மாநிலத்தில் சுமார் 10 கி.மீ. தூரத்திற்கு எந்த தடையுமின்றி ரூ. 50,000 மற்றும் அதற்கும் அதிகமான மதிப்பில் உள்ள சரக்குகளை எடுத்துச் செல்லலாம். இ-பில் ஜி.எஸ்.டி.யை பதிவு செய்வதற்காக சரக்கு வாகன உரிமையாளர்கள், வரி தொடர்பாக அதிகாரிகளையோ, சோதனை சாவடிகளையோ அணுக வேண்டியதில்லை.

இந்த நிலையில், இ-பில் ஜி.எஸ்.டி.யை பதிவு செய்வதில் உள்ள நடைமுறைகளை களைய கோவை, பீளமேடு பகுதியில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் மாநில வணிகவரித்துறையின் சார்பில் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 24-ம் தேதி மாலை 3 மணி முதல் 5 மணி வரை நடக்கும் இந்த நிகழ்ச்சியில் இ-பில் ஜி.எஸ்.டி. முறை குறித்து எடுத்துரைக்கப்பட இருக்கிறது. 

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...