திருப்பூரில் 15-வது புத்தகத் திருவிழா ஜனவரி 25-ம் தேதி தொடக்கம்

திருப்பூரில் 15-வது புத்தகத் திருவிழா வரும் ஜனவரி 25-ம் தேதி முதல் துவங்கி 10 நாட்கள் நடைபெறவுள்ளது.

திருப்பூர், ஜனவரி 23

திருப்பூரில் 15-வது புத்தகத் திருவிழா வரும் ஜனவரி 25-ம் தேதி முதல் துவங்கி 10 நாட்கள் நடைபெறவுள்ளது.

திருப்பூரில் ஆண்டுதோறும் பின்னல் புக் டிரஸ்ட் மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து திருப்பூர் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான புத்தகத் திருவிழா வரும் ஜனவரி 25ம் தேதியன்று துவங்கி பிப்ரவரி 4ம் தேதி வரை நடைபெறவுள்ளது.



திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள பத்மினி கார்டனில் நடைபெற உள்ள இதில், அமைக்கப்படவுள்ள 150 அரங்குகளில் பாரதி புத்தகாலயம், காலச்சுவடு பதிப்பகம், விஜயா பதிப்பகம், விகடன், சைவ சித்தாந்த பதிப்பகம் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் பங்குபெறவுள்ளன.

கடந்தாண்டு சுமார் 60 ஆயிரம் பேர் பார்வையிட்டனர். இதில், 1 கோடியே 25 லட்சம் ரூபாயிக்கு புத்தகங்கள் விற்பனையாகி சாதனை படைக்கப்பட்டது. இந்தாண்டு 1 லட்சம் பார்வையாளர்கள் வரக்கூடும் எனவும், ரூபாய் 1 கோடியே 50 லட்சம் வரை புத்தகங்கள் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...