விவசாயிகளுக்கான வேளாண் தகவல் மையத்தின் 15-வது ஆண்டுவிழா- குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்த வேளாண் அதிகாரிகள்

விவசாயிகளுக்கான வேளாண் தகவல் மையத்தின் 15-வது ஆண்டுவிழா கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.

கோவை, ஜனவரி 23

விவசாயிகளுக்கான வேளாண் தகவல் மையத்தின் 15-வது ஆண்டுவிழா கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.



விவசாயத்திற்கு உதவும் விதமாகவும், விவசாயிகளுக்கு எழும் சந்தேகங்களைத் தீர்க்கும் வகையிலும் வேளாண் தகவல் மையம் “கிசான் கால் சென்டர்” தொடங்கப்பட்டது.

இந்த சேவை தொடங்கப்பட்டு 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. தொடர்ந்து, 15-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த சேவைக்கு ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது.

கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த விழாவில், ‘சமிதி’ வேளாண்மை பயிற்சி மையத்தின் இயக்குநர் சங்கரலிங்கம் கலந்து கொண்டு இவ்விழாவினை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், ‘விவசாயிகளுக்கு பயன்பெறும் விதமாகத் தொடங்கப்பட்ட இந்த ‘கிசான் கால் சென்டர்’ சேவையானது தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட வேண்டும்’ என்றார்.

இவ்விழாவில், கோவை வேளாண் இணை இயக்குநர் சுகுமார், மத்திய மற்றும் மாநில அரசுகளின் வேளாண்மைத் துறை அதிகாரிகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...