கிராமசபைக் கூட்டத்தில் ரேஷன் கடைகளின் கணக்குகள் சமூக தணிக்கை

பொதுவிநியோகத் திட்டத்தில் உள்ள நம்பகத் தன்மையை உறுதிப்படுத்தும் விதமாக, கோவையில் கிராம ஊராட்சிகளில் உள்ள ரேஷன் கடைகளின் கணக்குகளை சமூக தணிக்கை செய்ய இருப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோவை, ஜனவரி 23

பொதுவிநியோகத் திட்டத்தில் உள்ள நம்பகத் தன்மையை உறுதிப்படுத்தும் விதமாக, கோவையில் கிராம ஊராட்சிகளில் உள்ள ரேஷன் கடைகளின் கணக்குகளை சமூக தணிக்கை செய்ய இருப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 

கோவை மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் குடியரசு தினத்தன்று (ஜன.,26) நடைபெற உள்ள கிராமசபைக் கூட்டத்தில் தொடர்புடைய ஊராட்சிகளின் எல்லைக்குட்பட்ட ரேஷன் கடைகளின் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் குறித்த அனைத்துவித கணக்குகள் சமூகத் தணிக்கைக்கு முன்னிலைப்படுத்தப்பட உள்ளன. பொதுவிநியோகத் திட்டத்தின் செயல்பாட்டிலும், ரேஷன்கடைகளின் செயல்பாட்டிலும் வெளிப்படையான நடைமுறையைக் கொண்டு வரும் வகையில் செயல்படுத்தப்படும் சமூகத் தணிக்கையினால் பொதுமக்களின் குறைகள் பதியப்பட்டு குறைகள் களைந்திட நடவடிக்கை எடுக்கப்படும். 

எனவே, பொதுமக்கள் பெருந்திரளாக மேற்படி சமூகத் தணிக்கையில் கலந்து கொண்டு பொதுவிநியோகத் திட்டம் தொடர்பான தங்களது குறைகளைத் தெரிவித்து பயன்பெற்றிடுமாறும், மேலும் இத்திட்டம் சிறந்த முறையில் செயல்பட பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தெரிவித்துள்ளார். 

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...