திருப்பூரில் உண்ணாவிரத போராட்டத்தால் வெறிச்சோடியது வருவாய்துறை அலுவலகங்கள்

திருப்பூர் ஜனவரி 23

திருப்பூரில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதிய பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. 

இதில் திருப்பூர்,கோவை,ஈரோடு, நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த அலுவலர்கள்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். மேம்படுத்தப்பட்ட தனி ஊதியம் வழங்கிட வேண்டும், விடுமுறை நாட்களில் கூடுதல் பணி நேர மதிப்பூதியம், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும், காலி பணியிடங்களை நிரப்பிடவேண்டும்,நேரடி வட்டாட்சியர் நியமனம் கூடாது உள்ளிட்ட 20 அம்ச கோரில்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

மேலும் கோரிக்கைகளை அரசு பரிசீலிக்கவில்லை என்றால் வரும் பிப்ரவரி 7 மற்றும் 8 ஆகிய இரு நாட்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். 

இதனிடையே திருப்பூர் வடக்கு தெற்கு, உள்ளிட்ட வருவாய் துறை அலுவலகங்களில் அலுவலர்கள் பணிக்கு  ஓட்டுமொத்தமாக செல்லாமல் போராட்டத்தில் கலந்துகொண்டதால் வருவாய்துறை அலுவலகங்கள் வெரிச்சோடி காணப்பட்டது. பணிகள் முற்றிலும் முடங்கியதால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்தனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...