குடியிருப்பு கட்டிடங்களுக்கு அனுமதி பெற்று அதை வணிக நோக்கில் பயன்படுத்தக் கூடாது- நீலகிரி ஆட்சியர்

நீலகிரி மாவட்டத்தில் குடியிருப்பு கட்டிடங்களுக்கு அனுமதி பெற்று அதை வணிக நோக்கில் பயன்படுத்தக் கூடாது என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார்.

நீலகிரி, ஜனவரி 24

நீலகிரி மாவட்டத்தில் குடியிருப்பு கட்டிடங்களுக்கு அனுமதி பெற்று அதை வணிக நோக்கில் பயன்படுத்தக் கூடாது என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகள், 35 ஊராட்சிப் பகுதிகளிலும் அனுமதிக்கு மாறாகக் கட்டிடங்கள் பயன்படுத்தப்பட்டு வருவது கண்டறியப்பட்டது. இதனை ஆய்வு செய்த களநிலை அலுவலர்கள், இந்தக் கட்டிடங்கள் முதலில் குடியிருப்பு கட்டிடங்களாக அனுமதி பெற்று, பிறகு வணிக ரீதியாக (ரிசார்ட்ஸ் உள்பட) பயன்படுத்தப்படுவது உறுதி செய்தனர்.

இந்தக் கட்டிடங்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி கட்டிட விதிகள் 1997 மற்றும் மலைப்பிரதேச கட்டிட விதிகள் 1993-ன் கீழ் அங்கீகாரம் பெற தகுதி உள்ளவையாக இருப்பின் உரிய விதிமுறைகளைப் பின்பற்றி, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு மூலம் அங்கீகரித்து, அனுமதி வழங்கி, அரசுக்கான வருவாய் இழப்பைச் சரிக்கட்டும் நடவடிக்கை பரிசீலனையில் உள்ளது.

எனவே, அனுமதிக்கு மாறாக வியாபார நோக்கில் கட்டிடங்களை பயன்படுத்தி வரும் கட்டிட உரிமையாளர்கள் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கட்டிடக் கலை மற்றும் அழகுணர்வு காப்புக்குழு மற்றும் மலையிட காப்புக் குழுமம் அமைப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...