பேருந்து கட்டண உயர்வுக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி : கட்டண நிர்ணய விவகாரங்களில் தலையிட முடியாது என்றும் கருத்து

அரசு நிர்வாகத்தை நீதிமன்றம் நடத்த முடியாது எனக் கூறி பேருந்து கட்டண உயர்வுக்கு எதிரான மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஜனவரி 24

அரசு நிர்வாகத்தை நீதிமன்றம் நடத்த முடியாது எனக் கூறி பேருந்து கட்டண உயர்வுக்கு எதிரான மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தமிழக அரசு பேருந்து கட்டண உயர்வை அறிவித்தது. இந்தக் கட்டண உயர்வுக்கு தமிழகத்தில் மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மாநிலம் முழுவதும் மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக வழக்கறிஞர் ஆர். சித்ரவேலு, வி. முனிகிருஷ்ணன் ஆகியோர் தனித்தனியாக உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

அந்த மனுக்களில், தமிழக அரசு பல்வேறு காரணங்களைக் கூறி அரசு பேருந்து கட்டணத்தை கடந்த 20-ந்தேதி முதல் திடீரென உயர்த்தியுள்ளது. இந்த திடீர் பேருந்து கட்டண உயர்வால், அரசு பேருந்துகளை மட்டுமே நம்பியுள்ள 80 சதவீதம் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏனெனில், இதுநாள் வரை மற்ற போக்குவரத்தைக் காட்டிலும், பேருந்து கட்டணம் மட்டும்தான் குறைவாக இருந்தது. ஆனால், இப்போது பேருந்து கட்டணம் தான் மற்ற போக்குவரத்தைக் காட்டிலும் அதிகமாக உள்ளது.

மேலும், கட்டண உயர்வுக்கு அரசு தற்போது கூறும் பல்வேறு காரணங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. ஒரேநாள் இரவில் திடீரென எவ்வித முன்னறிவிப்புமின்றி முடிவு செய்து, மறுநாள் காலையில் அதிக பேருந்து கட்டணம் வசூலிக்கப்பட்டதால் பயணிகள் சொல்ல முடியாத துயரங்களை சந்தித்தனர். இதனால், அரசு பேருந்துகளில் பயணம் செய்வோர் தங்களின் மாதாந்திர சம்பளத்தில் பெரும் தொகையைப் பேருந்து கட்டணத்திற்கு செலவிட நேரிடுகிறது.

ஏற்கனவே, பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு போன்றவற்றால் கடும் இன்னலுக்கு ஆளாகிவரும் பொதுமக்கள், தற்போது இந்தப் பேருந்து கட்டண உயர்வால் மேலும் அவதியடைந்து வருகின்றனர். எனவே, இந்த திடீர் பேருந்து கட்டண உயர்வுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். பேருந்து கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது

வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி, அரசு நிர்வாகத்தை நீதிமன்றம் நடத்த முடியாது. கட்டண நிர்ணய விவகாரங்களில் தலையிட முடியாது என உச்சநீதிமன்ற தீர்ப்புகள் உள்ளன. பல பொருட்களின் விலை உயர்கிறது. ஒவ்வொன்றிலும் நீதிமன்றம் எப்படி தலையிடமுடியும். என்றார். ஆகவே, பேருந்து கட்டண உயர்வுக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்வதாக நீதிபதி தெரிவித்தார். இதனிடையே, அனைத்து அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகளில் கட்டண விவரத்தை ஒட்ட வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...