அ.தி.மு.க. அம்மா என்ற பெயரை தினகரன் உரிமைகோரிய வழக்கு: ஓபிஎஸ், இபிஎஸ்-க்கு நோட்டீஸ்

அ.தி.மு.க. அம்மா என்ற பெயரை பயன்படுத்த அனுமதி கோரி டி.டி.வி. தினகரன் தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


ஜனவரி 24

அ.தி.மு.க. அம்மா என்ற பெயரை பயன்படுத்த அனுமதி கோரி டி.டி.வி. தினகரன் தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அ.தி.மு.க.வின் அணிகள் இணைப்புக்குப் பிறகு தனித்து செயல்பட்டு வரும் டி.டி.வி. தினகரன், சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார். மேலும், தனது ஆதரவாளர்களை உள்ளாட்சித் தேர்தலுக்கும் தயார்படுத்தி வருகிறார். அ.தி.மு.க. அம்மா என்ற பெயரை தொடர்ந்து பயன்படுத்த அனுமதி கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தினகரன் சார்பில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், விரைவில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதாகவும், அதனால் ‘அ.தி.மு.க. அம்மா’ என்ற பெயரில் தங்கள் அணி செயல்பட அனுமதி வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தான் அமோக வெற்றி பெற்றுள்ளதை சுட்டிக்காட்டியதோடு, இரட்டை இலை தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் தங்களுக்கென பொதுவாக ஒரு சின்னம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் நெருங்குவதால் தங்களது மனுவை விரைவில் விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தினகரன் தாக்கல் செய்த மனு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ரேகா பள்ளி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு தலைமை தேர்தல் ஆணையம், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்ட நீதிபதி, இவ்வழக்கின் மறுவிசாரணையை பிப்ரவரி 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...