பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட மத்திய தொழிற்சங்கத்தினர் கைது

குறைந்தபட்ச ஊதியமாக 18 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மத்திய தொழிற்சங்கத்தினரை காவல்துறையினர் கைது செய்தனர்.


கோவை, ஜனவரி 25

குறைந்தபட்ச ஊதியமாக 18 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மத்திய தொழிற்சங்கத்தினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

குறைந்தபட்ச ஊதியமாக 18 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். சாலை பாதுகாப்பு மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை போக்குவரத்துத் தொழிலாளர்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று மத்திய தொழிற்சங்கத்தினர் பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதன் ஒருபகுதியாகக் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஏஐடியுசி, சிஐடியு, ஐஎன்டியுசி உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, மத்திய அரசு தொழிலாளர் மற்றும் மக்களுக்கு விரோதமாகச் செயல்பட்டு வருகிறது. தொழிற்சங்கத்தினரின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றும் வரை தொடர் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர். 

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்தப் போராட்டம் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் ஆட்சியர் அலுவலகம் அருகே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...