பசுந்தேயிலைக்கு ஆதார விலையை அதிகரிக்க வலியுறுத்தி தேயிலை விவசாயிகள் போராட்டம்

நீலகிரி, ஜனவரி 25

பசுந்தேயிலைக்கு ரூ.30 ஆதார விலையை தமிழக அரசு நிர்ணயம் செய்ய வலியுறுத்தி உதகை அருகேயுள்ள எடக்காடு கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட தேயிலை விவசாயிகள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்ட சிறு, குறு தேயிலை விவசாயிகள் சங்க தலைவர் ஜே.பி.சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் எடக்காடு, சூண்டட்டி, நடுஹட்டி, முக்கிமலை, அட்டுபாயில், காயகண்டி, கவுண்டம்பாளையம், சிவசக்தி நகர், அரைஹட்டி, பாதகண்டி, தாவஹட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டனர்.

இதில், அடுத்த கட்டமாக கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என்றும், வரும் பிப்ரவரி மாதம் உதகையில் பேரணி நடத்தவும் என்று துர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்து ஜே.பி.சுப்ரமணியம் கூறியதாவது:- நீலகிரி மாவட்டத்தில் தற்போது ஒரு கிலோ தேயிலைக்கு ரூ.8 மட்டுமே கிடைக்கிறது. இதனால் விவசாயிகள் நஷ்டத்தில் தத்தளிக்கின்றனர். கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ள தேயிலை விவசாயிகள் தொடர் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்’ என்றார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...