கே.எம்.சி.எச் மருத்துவமனையில் பெண்களுக்கான கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான மருத்துவ முகாம்

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் என்பது 15 முதல் 44 வயதிற்குட்பட்ட இந்தியப் பெண்களிடையே காணப்படும் இரண்டாவது பொதுவான புற்று நோயாகும். கர்ப்பப்பை வாய்ப்புற்று நோயினை பேப்ஸ் மியர் பரிசோதனை மூலம் கண்டுபிடித்துவிடலாம். HPV தடுப்பு மருந்து மூலம் தடுத்து விடலாம்.

கோவை, ஜனவரி 25

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் என்பது 15 முதல் 44 வயதிற்குட்பட்ட இந்தியப் பெண்களிடையே காணப்படும் இரண்டாவது பொதுவான புற்று நோயாகும். கர்ப்பப்பை வாய்ப்புற்று நோயினை பேப்ஸ் மியர் பரிசோதனை மூலம் கண்டுபிடித்துவிடலாம். HPV தடுப்பு மருந்து மூலம் தடுத்து விடலாம். தகுந்த சிகிச்சை மூலம் இதனைக் குணப்படுத்தியும் விடலாம்.

இந்த புற்று நோய்க்கான பரிசோதனை முகாம் கேஎம்சிஎச் மருத்துவமனை சார்பில் ஜனவரி 22ம் தேதி முதல் வரும் பிப்ரவரி 10-ம் தேதி வரை அம்மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் பேப்ஸ்ஸ்மியர் பரிசோதனை சலுகை கட்டணத்திலும் மேலும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் சிகிச்சை நிபுணரின் ஆலோசனை இலவசமாக வழங்கப்படுகிறது.

30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், ஒழுங்கற்ற அல்லது அதிகமான மாதவிடாய் இரத்தப்போக்கு, மாதவிடாய் நின்றபிறகு இரத்தப்போக்கு, காரணம் தெரியாத எடை இழப்பு, அடி வயிற்றில் தொடர்ந்து வலி, தாம்பத்திய உறவுக்குப்பின் இரத்தப்போக்கு, காரணம் தெரியாத பசியின்மை, மாதவிடாய் காலங்களுக்கு இடையே தொடர்ந்து இரத்தப்போக்கு உள்ளிட்ட மேற்கண்ட ஏதேனும் ஒரு அறிகுறிகள் உள்ளவர்கள் இம்முகாமில் கலந்து கொள்ளலாம்.

மேலும் விபரம் மற்றும் முன்பதிவிற்கும் 97901 97971 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளவும்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...