பூங்காவாக மாற்றியமைக்கப்பட்ட குப்பை மேடு- திறந்துவைத்த மாநகராட்சி ஆணையர்

சிறுதுளி, ராக், யுனிவர்சல் பிரதர்வுட் உள்ளிட்ட பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகளான ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், ஐக்கிய ஜமாஅத், குருத்வாரா மற்றும் மடாலயங்களை ஒன்றிணைத்து டிஏஎஸ்கே செயல்பட்டு வருகிறது.

கோவை, ஜனவரி 26

சிறுதுளி, ராக், யுனிவர்சல் பிரதர்வுட் உள்ளிட்ட பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகளான ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், ஐக்கிய ஜமாஅத், குருத்வாரா மற்றும் மடாலயங்களை ஒன்றிணைத்து டிஏஎஸ்கே செயல்பட்டு வருகிறது.



இந்த டிஏஎஸ்கே அமைப்பு கரும்புக்கடை பகுதியில் உள்ள அண்ணா காலனி பகுதியில் மாநகராட்சி பள்ளியின் அருகே குப்பை மேடாக இருந்த மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தினை மீட்டு சீரமைத்து முதலில் காய்கறிகள் தோட்டமாக அமைத்தது.



இதனைத் தொடர்ந்து இன்று (ஜனவரி 26) இந்த பூங்காவானது குழந்தைகள் விளையாடும் ஊஞ்சல், சறுக்கு விளையாட்டு போன்ற உபகரணங்கள் உள்ளடக்கிய சிறுவர் பூங்காவாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறுவர் பூங்காவின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. பூங்காவினை கோவை மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன் திறந்து வைத்து, தேசிய கொடியையும் ஏற்றினார்.



இந்நிகழ்வில், டிஏஎஸ்கே அமைப்பின் தலைவர் குர்தீப் சிங் ஆனந்த், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் செயலாளரும் டிஏஎஸ்கே ஒருங்கிணைப்பாளருமான அப்துல் ஹக்கீம், சிறுதுளி அமைப்பின் வனிதா மோகன், ராக் அமைப்பின் தலைவர் சி.ஆர். சுவாமிநாதன் மற்றும் செயலாளர் ரவீந்திரன், யுனிவர்சல் பிரதர்வுட் தலைவர் அட்வகேட் நந்தகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...