”நாளை நமதே” அரசியல் சுற்றுப்பயணம் குறித்து கவிதை வெளியிட்ட நடிகர் கமல்

’நாளை நமதே’ என்ற பெயரில் தனது அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்கவிருக்கும் நடிகர் கமலஹாசன், டுவிட்டரில் கவிதை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

ஜனவரி 26

’நாளை நமதே’ என்ற பெயரில் தனது அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்கவிருக்கும் நடிகர் கமலஹாசன், டுவிட்டரில் கவிதை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். 

நடிகர் கமலஹாசன் தனது சுற்றுப்பயணத்துக்கு ‘நாளை நமதே’ என்று பெயர் சூட்டியுள்ளார். இதுகுறித்து அவர் ஒரு கவிதையை தனது குரலில் ஆடியோவாக வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:- 

நாளை நமதே....

நேற்றையும் இன்றையும் ஆய்ந்து அறிந்தால்

நாளை நமதே....

பார்த்ததை பயின்றதை பழகி நடந்தால்

நாளை நமதே....

நிலவும் நீரும் பொதுவென புரிந்தால்

நாளை நமதே....

எனக்கே எனக்கென முந்தா திருந்தால்

நாளை நமதே...

மூத்தோர் கடமையை இளையோர் செய்தால்

நாளை நமதே...

அனைவரும் கூடி தேரை இழுத்தால்

நாளை நமதே....

சலியா மனதுடன் உழைத்து வாழ்ந்தால்

நாளை நமதே...

முனைபவர் கூட்டம் பெருகியும்விட்டால்

நாளை என்பது நமதே நமதே....

கிராமியமே நம் தேசியம் என்றால்

நாளை நமதே... வெற்றியும் நமதே...

தமிழர் தமிழால் இணைக்கப்பட்டால்

நாளை நமதே... நிச்சயம் நமதே....

நாளை நமதே.... நாளை நமதே...

இவ்வாறு கமலஹாசன்  கூறியுள்ளார்.

எம்.ஜி.ஆர். நடித்த ‘நாளை நமதே’ படத்தில் இடம் பெற்ற ‘நாளை நமதே’ பாடல் பாணியில் இந்த கவிதையும் தயாரிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...