சோளத்தட்டை ஏற்றி வந்த லாரி தீயில் கருகி சேதம்

கோவையில் சோளத்தட்டை ஏற்றி வந்த லாரி தீயில் கருகி சேதமடைந்தது.

கோவை, ஜனவரி 26

கோவையில் சோளத்தட்டை ஏற்றி வந்த லாரி தீயில் கருகி சேதமடைந்தது. 

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் அடைக்கலம். இவர் கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கால்நடைகள் தீவணமான சோளத்தட்டையை லாரியில் ஏற்றிக்கொண்டு கீரணத்தம் சாலையில் சென்றார். 

லாரியில் அதிக அளவில் சோளத்தட்டைகள் ஏற்றப்பட்டதால் அவை லாரியின் அளவை விட சற்று அதிக உயரத்திற்கு அடுக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில், சாலையில் இருந்த மின் கம்பியுடன் அவை உராய்ந்ததில் முழுவதுமாக தீப்பற்றியது. 

இது குறித்து , அப்பகுதி பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் கணபதி தீயணைப்பு நிலையத்தை சேர்ந்த தீயணைப்பு படை வீரர்கள் ஐந்து பேர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்க முயற்சித்தனர். 

சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. 

இந்த தீ விபத்தில் அதிஷ்டவசமாக யாருக்கும் எந்தவித சேதமும் ஏற்படவில்லை. ஆனால், லாரியின் பின் பகுதி மற்றும் டயர்கள் முற்றிலுமாக தீயில் கருகி சேதமடைந்தன.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...