நீலகிரியில் சாலையோரங்களில் கிடந்த பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றிய கல்லூரி மாணவர்கள்

நீலகிரி மாவட்டம் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ள மாவட்டம் என்பதால், சாலைகளில் வீசப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை அகற்றும் பணியில் தனியார் கல்லூரி மாணவர்கள் இன்று ஈடுபட்டனர்.

நீலகிரி, ஜனவரி 27

நீலகிரி மாவட்டம் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ள மாவட்டம் என்பதால், சாலைகளில் வீசப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை அகற்றும் பணியில் தனியார் கல்லூரி மாணவர்கள் இன்று ஈடுபட்டனர்.

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை செய்யப்பட்டுள்ள மாவட்டமாகும். இங்கு, ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் தங்களுடன் கொண்டு வரும் பிளாஸ்டிக் பாட்டில்கள், டம்ளர்கள், தட்டுகள் என சாலையோரங்களிலும், வனப்பகுதிகளிலும் வீசி விட்டு செல்வதால் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது.

இதனை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், இன்று தனியார் கட்டிடக்கலை கல்லூரி மாணவர்கள் தொட்டபெட்டா பகுதியில் இருந்து கோத்தகிரி வரை செல்லும் சாலையோரங்களில் உள்ள குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்து, மாணவர்களுடன் சேர்ந்து குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை அகற்றினார். மேலும், 2 கிலோ மீட்டருக்கு 17 மாணவர்கள் கொண்ட குழுவினர் குப்பைகளை அகற்றும் பணியில்  ஈடுபட்டனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...