சுற்றுச்சூழல் அறிஞர்களின் கருத்துகளை அறிவியல் நூலாக பதிவிட வேண்டும் - மாவட்ட வன அலுவலர் ந. சதிஸ்

ஓசை அமைப்பின் 100-வது சூழல் சந்திப்பு நிகழ்ச்சி கோவை சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்றது.

கோவை, ஜனவரி 28

ஓசை அமைப்பின் 100-வது சூழல் சந்திப்பு நிகழ்ச்சி கோவை சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்றது.



இதில் சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட வன அலுவலர் ந.சதிஸ், வனத்துறை கால்நடை மருத்துவர் மனோகரன் மற்றும் பல இயற்கை அமைப்புகளைச் சார்ந்தவர்களும் கலந்துகொண்டனர்.



இந்நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் பேசுகையில், "இது போன்ற சூழல் சந்திப்புகளில் பல தரப்பட்ட அறிஞர்களும், ஆர்வலர்களும் பேசியுள்ளனர். அவர்களுடைய கருத்துகளை அறிவியல் சார்ந்த தகவல்களை பின்னால் வரும் தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் வகையில் அறிவியல் சார்ந்த நூலாகப் பதிவிட வேண்டும்" என்றார்.



வாழ்த்துரை வழங்கிய பேரூர் ஆதினம் இளைய பட்டம் தவத்திரு மருதாச்சலம் அடிகளார் கூறுகையில், "குழந்தைகளை சமூக வலைதளங்களில் இருந்து காப்பாற்ற வீட்டில் மாடித்தோட்டம் அமைக்க வேண்டும். இதனால் அவர்களது கவனம் மாடித்தோட்டத்தின் மீது திரும்பும். மாடித்தோட்டம் அமைப்பதினால் பசுமையை அனைவரும் நம் வீடுகளிலேயே விதைக்கிறோம்" என்றார்.

இதனைத்தொடர்ந்து, இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் ஓசை காளிதாஸ் பேசுகையில், "இயற்கைக்கான குரலாக ஒலிக்கும் எமது செயல்பாடுகள் பதினெட்டாம் ஆண்டாகத் தொடர்கிறது. மக்கள் பங்களிப்போடுதான் இயற்கை வளங்களைக் காப்பாற்ற முடியும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையில் பல்வேறு தளங்களில் தொடர்ந்து இயங்கி வருகிறோம்.

அதன் ஒரு வடிவம்தான் சூழல் சந்திப்பு. அது இன்று 100-வது சூழல் சந்திப்பை எட்டியுள்ளது. கோவையில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் இந்நிகழ்ச்சியை நடத்தி வருகிறோம். இயற்கை ஆர்வலர்கள் ஒன்றுகூடி தங்களின் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளும் இந்நிகழ்வில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக இயங்கும் பல அமைப்புகளும், செயற்பாட்டாளர்களும் உருவாக சூழல் சந்திப்பு பெரும் காரணமாக இருந்துள்ளது" என்றார்.



இந்நிகழ்ச்சியின் ஒருபகுதியாக இயற்கைக்காகப் பாடுபட்ட பல அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...