கோவையில் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று துவக்கம்

தேசிய போலியோ நோய் ஒழிப்புத்திட்டத்தின் கீழ் 23-வது போலியோ சொட்டு மருந்து முகாமின் முதலாவது மற்றும் இரண்டாவது சுற்றுகள் இன்று (ஜன. 28), மார்ச் 11 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற உள்ளது.


கோவை, ஜனவரி 28

தேசிய போலியோ நோய் ஒழிப்புத்திட்டத்தின் கீழ் 23-வது போலியோ சொட்டு மருந்து முகாமின் முதலாவது மற்றும் இரண்டாவது சுற்றுகள் இன்று (ஜன. 28), மார்ச் 11 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற உள்ளது. 

இதில், கோவை மாநகராட்சி சார்பாக மாநகராட்சி பகுதிகளில் 5 வயதிற்குட்பட்ட 1,61,787 குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது. இம்முகாம் இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்ந்து நடைபெறும்.



சீதாலட்சுமி நகர்நல மையத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் பங்கேற்று குழந்தைகளுக்கு மருந்து வழங்கி முகாமை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், உதவி நகர்நல அலுவலர் வசந்த் திவாகர், மாநகராட்சி அலுவலர்கள், சுகாதார அலுவலர்கள், சத்துணவு பணியாளர்கள், செவிலியர்கள், ரோட்டரி கிளப் மற்றும் மிட்டவுன் அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

வால்பாறை:-

வால்பாறை காந்திசிலை அருகே நடைபெற்று வரும் போலியோ சொட்டு மருந்து முகாமினை மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகம் துவக்கி வைத்தார். வால்பாறை வட்டார மருத்துவர் பிரவின் மற்றும் சுகாதார அலுவலர்கள், செவிலியர்கள் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.



தொடர்ந்து வால்பாறை பகுதியிலுள்ள வால்பாறை, சோலையார் நகர் மற்றும் முடீஸ் நகர் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் சார்பாக மொத்தம் 101 போலியோ சொட்டு மருந்து முகாம்களில் ஐந்து வயதிற்குட்பட்ட 3688 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட உள்ளது.

நீலகிரி:-



நீலகிரி மாவட்டம், உதகை அரசினர் தாவரவியல் பூங்காவில் நடைபெற்று வரும் போலியோ சொட்டு மருந்து முகாமில் மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா பங்கேற்று குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி முகாமினை துவக்கி வைத்தார்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...