பணக்கார இளைஞர்களைக் குறி வைத்து பண மோசடியில் ஈடுபட்ட நடிகை சுருதி மற்றொரு வழக்கில் கைது

திருமண ஆசை காட்டி பலரிடம் மோசடி செய்த சுருதி உள்ளிட்ட 4 பேர் இன்று மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

கோவை: திருமண ஆசை காட்டி பலரிடம் மோசடி செய்த சுருதி உள்ளிட்ட 4 பேர் இன்று மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டனர். அவர்களை பிப்ரவரி 13-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

சேலத்தைச் சேர்ந்த பாலமுருகன் அளித்த பண மோசடி புகாரில் நடிகை சுருதி, சித்ரா, பிரசன்ன சுபாஷ் உள்ளிட்ட 4 பேர் கடந்த 11-ஆம் தேதி கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்காக போலீசார் சுருதி வீட்டுக்குச் சென்றபோது, அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து பணி செய்ய விடாமல் குடும்பத்தினர் தடுத்துள்ளனர்.

இது தொடர்பாக இன்று 4 பேர் மீதும் மேலும் ஒரு வழக்குப் பதியப்பட்டு கோவை 3-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனைத்தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி வேலுச்சாமி, இவர்களை வரும் பிப்ரவரி 13-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து சுருதி உள்ளிட்ட 4 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...