பள்ளி மாணவர்களுக்கு ரூ. 10-க்கு 5 இட்லிகள் வழங்கும் தனியார் ஓட்டல் உரிமையாளர்

கோவையில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பள்ளி மாணவர்களுக்கு ரூ. 10-க்கு 5 இட்லியை வழங்கி வரும் தனியார் ஓட்டல்,பொதுமக்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.

கோவை: கோவையில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பள்ளி மாணவர்களுக்கு ரூ. 10-க்கு 5 இட்லியை வழங்கி வரும் தனியார் ஓட்டல், பொதுமக்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.

இயந்திரமயமான இன்றைய காலத்தில் அனைத்திலும் வியாபார நோக்கில் பார்க்கும் மக்களிடையே, அவ்வப்போது மக்களின் நலன்கருதி சிறிய அளவிலான உதவிகளை சிலர் ஆங்காங்கே செய்து கொண்டு தான் வருகின்றனர். அவர்களில் ஒருசிலர் பிரபலமாகின்றனர். பலர் வெளியுலகிற்கு தெரியாமலும் தங்களது உதவிகளை செய்து கொண்டே வருகின்றனர். 

இந்த நிலையில், கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் உள்ள ஏ1 உணவகத்தில் பள்ளி மாணவர்களின் நலனை கருதி, ஓட்டல் உரிமையாளரான ராசு பள்ளி மாணவர்களுக்கு குறைந்த விலையில் காலை உணவை வழங்கி வருகிறார். ரூ. 10 கொண்டு சென்றால் போதும் 5 இட்லியை வாங்கிக் கொண்டு பள்ளிக்குச் செல்லலாம்.



இது குறித்து உரிமையாளர் ராசு கூறுகையில், கடந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது அந்நிய குளிர்பானங்களை தவிர்க்குமாறு மாணவர்கள், பொதுமக்கள் கேட்டுக்கொண்டதின் பேரில் தங்களுடைய ஓட்டலில் அந்நிய குளிர் பானங்கள் விற்கப்படுவதில்லை. தற்போது, பள்ளி மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 5 இட்லி 10 ரூபாய்க்கு வழங்கி வருகிறேன். தமிழர் திருநாள் முதல் துவங்கப்பட்ட இந்தத் திட்டமானது மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 

மாணவர்களிடையே பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில், இட்லிக்கு தேவையான சாம்பார், சட்னி பிளாஸ்டிக் கவர்களில் கொடுக்காமல் பாத்திரங்களில் வழங்குகிறோம். என்றார். 

கருமத்தம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதியிலேயே இவரது ஓட்டலில் தான் குறைந்தபட்ச விலையில் புரோட்டா, சப்பாத்தி ரூ. 8-க்கும், தோசை ரூ.10-க்கும்,

மதிய முழு உணவு அசைவ குழம்புடன் ரூ. 50-க்கும் வழங்கி வருகிறார்.



இது குறித்து அப்பகுதியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் கூறுகையில், கருமத்தம்பட்டி, சோமனூர் பகுதியில் விசைத்தறி பிரதான தொழிலாக இருப்பதால், காலையில் நேரமாகவே பெற்றோர்கள் வேலைக்கு சென்று விடுகின்றனர். இதனால், பெரும்பாலான சமயம் குழந்தைகள் இரவு சமைத்த உணவையே சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கு செல்கின்றனர். தற்போது, ஓட்டலில் குறைந்த விலையில் காலை உணவு கிடைப்பதால் குழந்தைகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இவ்வாறு தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...