ஜல்லிக்கட்டு கலவரம் குறித்து மாநகர முன்னாள் காவல் ஆணையரிடம் விசாரணை மேற்கொள்ளப்படும்- நீதிபதி ராஜேஸ்வரன்


கோவை, ஜனவரி 31

கோவை மாநகர முன்னாள் காவல் ஆணையர் அமல்ராஜ் உள்ளிட்ட நால்வரிடம் ஜல்லிக்கட்டு கலவரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் என விசாரணை ஆணைய நீதிபதி ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.



கடந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு கலவரம் தொடர்பான விசாரணை ஆணையத்தின் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், 'கோவையில் 3-வது முறையாக விசாரணை நடத்த தற்போது வந்துள்ளோம். 3 நாட்களில் 20 பேரிடம் விசாரணை நடத்தச் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 



இன்று 6 பேர் விசாரணைக்கு வந்துள்ளனர். 2 பேர் வரவில்லை. கோவையைப் பொறுத்தவரை கடந்த ஆகஸ்ட் மாதம் 15 பேரிடமும், நவம்பர் மாதம் 8 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. சென்னையில் 960-யில் 47 பேரிடமும் மதுரையில் 888-யில் 132 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. வரும் மார்ச் முதல் வாரம் மற்றும் கடைசி வாரம் விசாரணை நடத்தப்படும்.



ஒருவரிடம் விசாரணை மேற்கொள்ள 20 நிமிடம் ஆகும். வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை மேற்கொள்வதால் கால தாமதமாகிறது. கோவையைப் பொறுத்தவரை போலீஸ் ஆதரவாளர்கள் 21 பேரிடமும், போலீசார் 7 பேரிடமும், பொதுமக்கள் 14 பேரிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது. நாளை முன்னாள் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், 2 உதவி ஆணையர்கள், 1 துணை ஆணையர் ஆகியோர் விசாரணை ஆணையத்தின் முன்பு ஆஜராக உள்ளனர். ஓர் ஆண்டுக்குள் விசாரணையை முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...