தண்ணீர், பயிர், விவசாயம் ஆகியவற்றிற்கு தனிபட்ஜெட் தேவை : விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

தண்ணீர், பயிர், விவசாயம் ஆகியவற்றிற்கு தனித்தனிப் பட்ஜெட் கொண்டுவருவதற்கான அறிவிப்பு நடப்பு பட்ஜெட்டில் இடம் பெற வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

கோவை : தண்ணீர், பயிர், விவசாயம் ஆகியவற்றிற்கு தனித்தனிப் பட்ஜெட் கொண்டுவருவதற்கான அறிவிப்பு நடப்பு பட்ஜெட்டில் இடம் பெற வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. 



இது தொடர்பாக கோவையில் பத்திரிக்கையாளர்கள் மன்றத்தில் தமிழ்நாடு விவசாய சங்கங்கள் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி பேசுகையில்,

மானியம், இலவசம், கடன், கடன் தள்ளுபடி, காப்பீடு, நிவாரணம் போன்றவற்றால் விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க முடியாது. ஊதிய கமிட்டி பரிந்துரையை அரசு நடைமுறைப்படுத்துவது போன்று விவசாயக் கமிட்டியின் பரிந்துரையையும் ஏற்று அரசு செயல்படுத்தினால் மட்டுமே பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசுத்தலைவர் கூறியது போன்று விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்க முடியும். 

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை சந்திக்க இருப்பது வெறும் சடங்காக மட்டுமே இருக்கும். காவிரி நீருக்காக தமிழகம் யாரிடமும் கெஞ்சத் தேவையில்லை. பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் போன்று நாள்தோறும் நதிநீர் பங்கீடு என்று காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை திருத்தி அமைக்க வேண்டும். நாட்டின் 58 சதவிகிதம் விவசாயத் தொழில் இருக்கும் நிலையில், பட்ஜெட்டில் 2.5 சதவிகிதம் மட்டுமே ஒதுக்கீடு செய்வது என்பது விவசாய விரோதப்போக்கு. 



சுற்றுச்சூழலைப் பாதிக்கும் தொழில்களுக்கு சிவப்பு கம்பள விரிப்பதற்கு முற்றுப்புள்ளி வைத்து உணவுமுறை மாற்றம், பயிர்முறை மாற்றம், வாழ்க்கை முறை மாற்றம், பருவநிலை மாற்றம், மக்கள் தொகைக்கு ஏற்ப இவற்றிற்கு தீர்வுகாணும் வகையில் விவசாயத்தை மேம்படுத்தும் திட்ட அறிவிப்பு பட்ஜெட்டில் இடம்பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

மேலும், காவிரி நடுவர்மன்ற தீர்ப்பான 5 தொகுதிகளை (VOLUME) நடிகர் ரஜினி படித்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார் என்றும், நடிகர்கள் அரசியலுக்கு வருவது நாட்டுக்கு கேடு என தமிழ்நாடு விவசாய சங்கங்கள் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி தெரிவித்தார். 

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...