பணக்கார நாடுகளில் இந்தியாவிற்கு 6-வது இடம்

உலக பணக்கார நாடுகளின் பட்டியலில் இந்தியா ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது.


இந்தியா :  உலக பணக்கார நாடுகளின் பட்டியலில் இந்தியா ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது. 

நியூ வேர்ல்டு வெல்த் என்னும் நிறுவனத்தின் அறிக்கைபடி 2017-ம் ஆண்டு அமெரிக்கா முதல் இடத்தில் இருக்கிறது. மொத்த சொத்துகளின் மதிப்பு 64,58,400 கோடி டாலர்கள் ஆகும். அடுத்த இடத்தில் சீனா (24,80,300 கோடி டாலர்) இருக்கிறது. மூன்றாவது இடத்தில் ஜப்பான் (19,52,200 கோடி டாலர்), நான்காவது இடத்தில் இங்கிலாந்து (9,91,900 கோடி டாலர்), ஐந்தாவது இடத்தில் ஜெர்மனி (9,66,000 கோடி டாலர்) மற்றும் ஆறாவது இடத்தில் இந்தியா (8,23,000 கோடி டாலர்) இருக்கிறது. 

அடுத்தடுத்த இடங்களில் பிரான்ஸ், கனடா, ஆஸ்திரேலியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் இருக்கின்றன. கடந்த ஆண்டு இந்தியாவில் சொத்து மதிப்பு அதிகமாக உயர்ந்துள்ளது. 2016-ம் ஆண்டு முடிவில் 6,58,400 கோடி டாலர் என்னும் அளவில் இருந்த சொத்து மதிப்பு 2017-ம் ஆண்டு முடிவில் 25 சதவீதம் 8,23,000 கோடி டாலர் ஆக உயர்ந்திருக்கிறது. தனிப்பட்ட நபர்கள் வைத்திருக்கும் சொத்து, பணம், பங்குகள், தொழில் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து ஒவ்வொரு நாட்டிலும் எவ்வளவு சொத்து மதிப்பு மதிப்பிடப்படுகிறது. 

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...