அவினாசி சாலையில் மேம்பாலம் கட்ட நடைபெற்று வரும் பணியினை அமைச்சர் ஆய்வு

உப்பிலிபாளையம்- சின்னியம்பாளையம் வரியிலான சாலையில் மேம்பாலம் கட்ட நடைபெற்று வரும் மண் ஆய்வுப் பணிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று பார்வையிட்டார்.

கோவை : உப்பிலிபாளையம்- சின்னியம்பாளையம் வரியிலான சாலையில் மேம்பாலம் கட்ட நடைபெற்று வரும் மண் ஆய்வுப் பணிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று பார்வையிட்டார்.



கோவையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் வாகன பெருக்கத்தினை கருத்தில் கொண்டு உப்பிலிபாளையம் முதல் சின்னியம்பாளையம், காளப்பட்டி சாலை வரை உயர்மட்ட மேம்பாலம் கட்டும் திட்டத்திற்கு கடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை ரூ.950 கோடி அறிவிக்கப்பட்டது.



அதனைத்தொடர்ந்து, 2016 நவம்பர் 30ம் தேதியன்று விரிவான திட்டம் தயாரித்து நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. சுமார் 9 கிலோ மீட்டர் நீளத்திற்கு சர்வே மற்றும் போக்குவரத்துக் கணக்கீடு பணி முடிக்கப்பட்டு 170 இடங்களில் மண் பரிசோதனை ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதில் 60 இடங்களில் ஆழ்துளை பணி முடிக்கப்பட்டு வரும் மார்ச் மாதம் இறுதிக்குள் வடிவமைப்பு மற்றும் மதிப்பீடு தயாரிக்கும் பணிகள் நிறைவுபெற உள்ள நிலையில் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, இன்று அவினாசி சாலையில் உள்ள நவ இந்தியா அருகே ஆய்வு மேற்கொண்டார்.



இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கோவையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக 9 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. மார்ச் மாத இறுதிக்குள் மண் பரிசோதனை செய்யும் பணி நிறைவடையும். மண் பரிசோதனைக்காக 65 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதே போல, அத்திக்கடவு- அவினாசி திட்டத்தினை இரண்டாண்டுகளில் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், உக்கடம் பாலம், மேற்கு புறவழிச்சாலை, ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், லாரிப்பேட்டை போன்ற பணிகள் அனைத்தும் கொண்டு வரப்படும்.

காவிரி நீருக்காகத் தமிழக முதலமைச்சர் கர்நாடக முதலமைச்சரைச் சந்திக்கும் முயற்சி பாராட்டுதலுக்குரியது.

கோவை, அவினாசி சாலையில் அமையும் பாலமும், மெட்ரோ திட்டமும் ஒன்றுக்கு ஒன்று இடையூறு ஏற்படாமல் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட இருக்கிறது. மெட்ரோ ரயில் திட்டம் நீண்ட கால திட்டம், அதற்காக இந்த பால திட்டத்தை நிறுத்த முடியாது. இரண்டும் பாதிப்பில்லாத வகையில் வடிவமைக்கப்படும். அதேப் போல கோவை 100 அடி சாலையில் இருக்கும் பாலம் பிரச்சனைகள் இல்லாதபடி வடிவமைக்கப்பட்டுள்ளது.

மத்திய இராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை மிரட்டியதாக வெளியான தகவல் தவறானது. தவறான தகவல் என்பதால் அதற்கு உடனடியாக பதில் சொல்லவில்லை. இராணுவ தளவாடங்களுக்கான ஆய்வகம் அமைக்க வேண்டும் என மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டது. மத்திய அமைச்சரை சந்தித்த போது எஸ்.ஆர்.சேகர், வானதி சீனிவாசன் போன்ற பாஜக நிர்வாகிகள் அனைவரும் உடன் இருந்தனர். பாஜக மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் பேசியதை நான் பார்க்கவில்லை. அதை பார்க்காமல் கருத்து சொல்லமுடியாது.

தமிழகத்தில் பேருந்து வழித் தடங்களை அமைச்சர்கள் வாங்கிவிட்டதாக டி.டி.வி. தினகரன் ஆதரவாளர் செந்தில் பாலாஜி கூறியது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. தமிழகத்தில் தரமான 2000 பேருந்துகள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. கனத்த இதயத்துடன் போக்குவரத்துக் கட்டணம் உயர்த்தப்பட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த பேட்டியின் போது சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ஜூனன், அருண்குமார், ஆறுக்குட்டி ஆகியோர் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...