நீலகிரியில் சந்திர கிரகணத்தை பொதுமக்கள் காண சிறப்பு ஏற்பாடு

​150 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் சந்திர கிரகணம் பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் காண சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது


நீலகிரி, ஜனவரி 31

​150 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் சந்திர கிரகணம் பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் காண சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகை அருகே முத்தொரை பாலா டாவில்  ரேடியோ வானிலை மையம் அமைந்துள்ளது. இங்கு வானியல் பற்றிய ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. மேலும்,வான்வெளியில் நடக்கும் அதிசயங்களை பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கண்டு பயன்பெறும் வகையில் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது.



இந்நிலையில், 150 ஆண்டுகள் பிறகு இன்று முழு சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. புளூ மூன் என்று அழைக்கப்படும் அரிய நிகழ்வாக இன்று நடைபெறவுள்ளது. இத்தகைய அரிய நிகழ்வு ஆசிய கண்டத்தில் உள்ள பொதுமக்கள் கண்டு ரசிக்கலாம். மாலை 6 மணி முதல் 7.37 வரை நிகழ உள்ள இந்த சந்திர கிரகணத்தை பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் காணும் வகையில், உதகை ரேடியோ வானிலை மையத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்காக அதி நவீன ஆப்டிக்கல் டெலஸ்கோப் நிறுவப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் கிரகணத்தை விளக்கும் வகையில் கலந்துரையாடல் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...