திருமண மோசடி செய்த ஸ்ருதி மீது மேலும் ஒரு வழக்கு : போலீஸார் அடித்து துன்புறுத்தியதாக கண்ணீர் மல்க நீதிபதியிடம் நடிகை புகார்

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ஸ்ருதி, மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கோவை : திருமணம் செய்து கொள்வதாகக் கூறி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ஸ்ருதி, மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

சேலத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி, ரூ. 41 லட்சம் மோசடி செய்த வழக்கில் சினிமா நடிகை ஸ்ருதி, சித்ரா, பிரசன்ன வெங்கடேஷ், சுபாஷ் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். நடிகை ஸ்ருதி திருமணம் செய்து கொள்வதாகக் கூறி,பல இளைஞர்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக அடுத்தடுத்து பல்வேறு புகார்கள் எழுந்தன. இந்நிலையில், பாலமுருகன் அளித்த புகாரின் பேரில் ஸ்ருதி உள்ளிட்ட 4 பேரை கைது செய்ய சென்ற போது, போலீஸாரை தாக்கிய வழக்கில் நேற்று கைது செய்யப்பட்டனர். 

இதைதொடர்ந்து, கடந்த 2016-ம் ஆண்டு நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மென்பொறியாளர் சந்தோஷ்குமார் என்பவரிடம் ரூ. 43 லட்சம் மோசடி செய்த வழக்கில், இன்று ஸ்ருதி, சித்ரா, பிரசன்ன வெங்கடேஷ் ஆகிய 3 பேரை போலீஸார் இன்று கைது செய்தனர். ஏற்கனவே, சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், 3 பேரையும் மேலும் ஒரு வழக்கில் கைது செய்து கோவை முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். 

நீதிபதி முன்பு விசாரணையின் போது தன்னையும், தன் தாயாரையும் போலீசார் அடித்து துன்புறுத்தியதாக கதறியபடி நடிகை ஸ்ருதி தெரிவித்தார். மேலும், மீண்டும் போலீசார் விசாரணைக்கு அனுமதி அளிக்க வேண்டாம் எனவும் அவர் நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தார். 

இதனையடுத்து, 3 பேரையும் வரும் பிப்ரவரி 14-ம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி நம்பிராஜன் உத்தரவிட்டார். இந்த வழக்கில் 3 பேரையும் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கோவை சைபர் கிரைம் போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணையை நாளைக்கு நீதிபதி நம்பிராஜன் ஒத்திவைத்தார். இதைத்தொடர்ந்து, ஸ்ருதி உள்ளிட்ட மூவரும் கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...