நீலகிரியில் 500 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் பலி

நீலகிரி மாவட்டம் கேத்தி மலைபாதையில் ஐநூறு அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒட்டுனர் பலியானார். மேலும், 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

நீலகிரி : நீலகிரி மாவட்டம் கேத்தி மலைபாதையில் ஐநூறு அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒட்டுனர் பலியானார். மேலும், 2 பேர் படுகாயம் அடைந்தனர்.



உதகையை அடுத்துள்ள அண்ணாகாலனி பகுதியை சேர்ந்த சதிஷ், முத்து, சசி உள்ளிட்ட 3 பேர் மாலை 7 மணி அளவில் லாரியில் காய்கறியை ஏற்றிக் கொண்டு உதகையிலிருந்து மேட்டுப்பாளையம் சென்று கொண்டிருந்தனர். அப்போது, லாரியானது கேத்தி அருகே சென்ற போது கட்டுபாட்டை இழந்து 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்து அங்குள்ள வீட்டின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. 



இதில், அந்த வீட்டில் இருந்தவர்கள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் லாரியில் சென்ற சதிஷ் மற்றும் முத்து ஆகியோரை பலத்த படுகாயங்களுடன் மீட்டு உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல் உதவி சிகிச்சை அளிக்கபட்ட பின்னர் சதிஷ் மேல் சிகிச்சைக்காக கோவைக்கு அனுப்பி வைக்கபட்டார். இதனிடையே, இந்த விபத்தில் சிக்கிய மற்றொருவரின் நிலை என்ன என்று தெரியாததால் அவரை தேடும் பணி நள்ளிரவு வரை தொடர்ந்து நடைபெற்றது. இந்நிலையில் இன்று காலை சசிகுமார் உடல் சடலமாக மீட்கப்பட்டது இது குறித்து கேத்தி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...