மத்திய பட்ஜெட்டால் விலை உயரும், குறையும் பொருட்களின் விபரம்

மத்திய பொது பட்ஜெட்டில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு சுங்கவரி அதிகரிக்கப்பட்டுள்ளதால், மொபைல் போன், மோட்டார் சைக்கிள், பழரசங்கள், காலனிகள் உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மத்திய பொது பட்ஜெட்டில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு சுங்கவரி அதிகரிக்கப்பட்டுள்ளதால், மொபைல் போன், மோட்டார் சைக்கிள், பழரசங்கள், காலனிகள் உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

2018-19-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜேட்லி இன்று தாக்கல் செய்தார். அதில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கான சுங்க வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், வரும் நாட்களில் இந்த வகை பொருட்கள் விலை உயரும்.

அதேசமயம், வெளிநாடுகளில் இருந்து தோல் உரிக்காமல் இறக்குமதி செய்யப்படும் முந்திரி, சோலார் பேனலில் பயன்படுத்தப்படும் ஒருவகை கண்ணாடி, காது கேளாதோருக்கான இயந்திரங்களுக்கான பொருட்களின் வரி குறைக்கப்பட்டுள்ளன.

விலை உயரும் இறக்குமதி பொருட்கள்:

1. இறக்குமதி கார் மற்றும் மோட்டார் சைக்கிள்

2. மொபைல் போன்கள்

3. வெள்ளி, தங்கம்

4. காய்கறிகள், பழரசங்கள், குறிப்பாக ஆரஞ்சு, கிரான்பெரி

5. சன்கிளாஸ் (மூக்குக் கண்ணாடி)

6. சோயா புரோட்டீன் தவிர்த்த சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்கள்

7. பெர்பியூம் (வாசனை திரவியம்), கழிவறை பொருட்கள்

8. சன்ஸ்கீரன், சன் டேன், மணிகியூர், பெடிகியூர் லோஷன்கள்

9. பற்பசை, பல்மருத்துவத்தில் பயன்படும் பேஸ்ட், பவுடர்கள்

10. முகச்சவரம் செய்ய பயன்படும் பொருட்களுக்கான மூலப்பொருட்கள்.

11. டியோடரன்ட்டுகள்

12. பஸ், டிரக்கில் பயன்படும் ரேடியல் டயர்கள்

13. பட்டுத் துணி

14. காலணிகள்

15. ஸ்மார்ட் வாட்ச்

16. எல்சிடி, எல்இடி, டிவி பேனல்கள்

17. நாற்காலி, மேசைகள்

18. மெத்தைகள்

19. விளக்கு

20. கைக்கடிகாரம், பாக்கெட் கடிகாரம், கடிகாரம்

21. பொம்மைகள், குழந்தைகள் விளையாடும் சிறு பொம்மைகள்.

22. வீடியோ கேம் பொருட்கள்

23. உள்ளரங்கு, மைதான விளையாட்டுகளில் பயன்படுத்தும் உபகரணங்கள்.

24. சிகரெட், லைட்டர்கள், மெழுகுவர்த்தி

25. பட்டம்

26. சமையல் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், கடலை எண்ணெய்

விலை குறையும் இறக்குமதி பொருட்கள்:

1. கச்சா முந்திரி

2. சோலார் பேனல் அமைக்க பயன்படும் ஒருவகை கண்ணாடி

3. காதுகேளாதார் பயன்படுத்தும் இயந்திரங்களுக்கான பொருட்கள்.

4. மின்னணு பொருட்களுக்கு பயன்படும் சிறிய திருகு உள்ளிட்ட பொருட்கள்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...