கோவையில் போலீசார் போல நடித்து பெண்களிடம் நகைகளை கொள்ளையடித்த வடமாநில வாலிபர்கள் 7 பேர் கைது

கோவை சுற்றுவட்டாரப் பகுதிகளில் போலீசார் போல நடித்து பெண்களிடம் நகைகளை கொள்ளையடித்த வடமாநில வாலிபர்கள் 7 பேரை மாநகர தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை : கோவை சுற்றுவட்டாரப் பகுதிகளில் போலீசார் போல நடித்து பெண்களிடம் நகைகளை கொள்ளையடித்த வடமாநில வாலிபர்கள் 7 பேரை மாநகர தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். 

கோவையில் கடந்த சில ஆண்டுகளாக மர்ம நபர்கள் சிலர் தங்களை போலீசார் என்று கூறிக்கொண்டு சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்கள் மற்றும் வயதானவர்களிடம், "நாங்கள் மப்டியில் உள்ள போலீஸ். இது மிகவும் மோசமான பகுதி, கழுத்தில் அணிந்திருக்கும் நகைகளை கழட்டி தாருங்கள் பேப்பரில் மடித்துத் தருகிறோம். வீட்டிற்குச் சென்று அணிந்துகொள்ளுங்கள்" என்று கூறி, நகைகளை வாங்கிய பின்னர் பேப்பரில் மணல் மற்றும் கற்களை வைத்து அவர்களை ஏமாற்றி நகைகளை கொளையடித்து வந்தனர். 

இது தொடர்பாக மாநகர காவல்துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. பல நாட்களாக இந்த கும்பல் 'டிமிக்கி' கொடுத்து வந்த இந்தக் கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். 

இந்த நிலையில், ரமேஷ்குமார் (42) என்பவர்  நேற்று மதியம் வெரைட்டி ஹால் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது அவரை வழிமறித்த கும்பல், கத்தியைக் காட்டி மிரட்டி, அவர் அணிந்திருந்த 2.5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றது.  

இது தொடர்பாக, ரமேஷ்குமார் அளித்த புகாரின் பேரில் வெரைட்டிஹால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், கொள்ளையர்களைப் பிடிக்க 11 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. 

இந்த தனிப்படை போலீசார் இன்று காலை உக்கடம் - பேரூர் பைபாஸ் சாலையில் வாகனத்தநிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மகாராஷ்டிரா மாநில பதிவெண் கொண்ட கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்த நபர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். 

அப்போது அவர்கள், மும்பையைச் சேர்ந்த யாசர் அலி (47), தகி அலி (43), பைரோஸ் அலி சையது (36), ஷாகித் அலி (28), சபீர் அலி (32), அஸ்லாம் (6௦), ராகேஷ் (27) ஆகியோர் என்பதும் கோவையில் 8 கொள்ளை வழக்குகளிலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 4 கொள்ளை வழக்குகளிலும் சம்மந்தப்பட்டவர்கள் என்பது தெரியவந்தது.  தொடர்ந்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் 7 போரையும் கைது செய்து சிறையிலடைத்தனர். 

கடந்த சில மாதங்களாக வடமாநில வாலிபர்கள்  தமிழகத்திற்குள் நுழைந்து கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது. போலீசார் முறையாக ரோந்து பணிகளை மேற்கொள்வதும், வடமாநில வாலிபர்கள் குறித்த் தகவல்களை முழுமையாக சேகரிப்பதும் கட்டாயமாகியுள்ளது. 

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...