பொது மக்களுக்காக தொலைநோக்குப் பார்வையில் உருவாக்கப்பட்ட பட்ஜெட் : சர்வதேச தொழில்முனைவோர் அமைப்பு கருத்து

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் நடுநிலைமையுடனும், பொதுமக்களுக்காக தொலைநோக்குப் பார்வையில் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக சர்வதேச தொழில்முனைவோர் அமைப்பு தெரிவித்துள்ளது.

கோவை: மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் நடுநிலைமையுடனும், பொதுமக்களுக்காக தொலைநோக்குப் பார்வையில் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக சர்வதேச தொழில்முனைவோர் அமைப்பு தெரிவித்துள்ளது. 

மத்திய பட்ஜெட்டிற்கு வரவேற்பு தெரிவித்து சர்வதேச தொழில்முனைவோர் அமைப்பின் தலைவர் ஆடிட்டர் ஜி. கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தேசிய பாதுகாப்புத் திட்டம் என்ற திட்டத்தின் பெயரில் 10 கோடி குடும்பங்களுக்கு 5 லட்ச ரூபாய் காப்பீடு என்பது வரவேற்கத்தக்க ஒன்று. இதுதவிர இந்த பட்ஜெட்டில் வங்கிக் கடன் மட்டும் இல்லாமல் மற்ற தொழில் தொடங்குபவர்களும் கடன் வாங்கும் விதமாக மாற்று நிதி திட்டங்கள் இருப்பது தொழில் தொடங்குபவர்களுக்கு மற்றும் மிகவும் உதவிகரமாக இருக்கும்.

தவிர இந்த பட்ஜெட்டில் கண்டுபிடிப்புகள் தொடர்பான தொழில்நுட்பத்திற்கு அதிகளவில் நிதி ஒதுக்காதது மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா ஆகியவற்றுடன் ஒவ்வாததைப் போன்று உள்ளது. ரூ. 250 கோடி வரை விற்பனை உள்ள கம்பெனிகளுக்கான வரிவிகிதம் 30%-ல் இருந்து 25% ஆக குறைக்கப்பட்டது நல்ல மாற்றம். நிறுவனங்கள் மற்றும் எல்.எல்.பி. ஆகியவற்றிற்கும் தற்போதைய வரி 30%-ல் இருந்து 25% ஆக குறைத்திருக்க வேண்டும். அமெரிக்காவில் டிரம்ப் அரசு சமீபத்தில் கம்பெனிகளுக்கான வரியை 37%-ல் இருந்து 21% ஆக குறைத்தது குறிப்பிடத்தக்கது.

தனிநபர் வருமான வரி வரம்பு, வீட்டுக் கடனுக்கான வட்டி கழிவு ரூ.2,00,000/- ஆகியவற்றில் மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும், சொல்லக்கூடிய குறைந்தபட்ச மாற்று வரி விகிதம் குறைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மாற்றம் எதுவுமில்லை. பொதுவில் இந்த நல்ல ஒதுக்கீடு மற்றும் திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடைவதை அரசாங்கம் உறுதி செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...