தாய்ப்பால் கொடுக்கும் அறை சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய அவலம் : அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட மகளிருக்கான தாய்ப்பால் கொடுக்கும் அறை சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை : ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட மகளிருக்கான தாய்ப்பால் கொடுக்கும் அறை சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தபோது கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கும், ஆதரவற்ற குழந்தைகளுக்கான தொட்டில் குழந்தை திட்டம் உட்பட பல அரிய திட்டங்களை கொண்டு வந்தார். இந்த திட்டங்கள் அனைத்தும் சிறப்பாக செயல்பட்டு வந்த நிலையில், தற்போதைய தமிழக அரசின் மெத்தனமான செயல்பாட்டால் தாய்மார்கள் பாலூட்டும் அறை மூடிக்கிடக்கிறது. பேருந்து நிலையங்களில் வரும் பயணிகள் தங்களது குழந்தைகளுக்கு பாலூட்ட வேண்டிய சூழல் இருப்பதால் மூடிக்கிடக்கும் இந்த அறையை பயன்படுத்த முடியாமல் தவித்து வருவதாக பொது மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். 

உக்கடம், மேட்டுப்பாளையம், சிங்காநல்லூர் பேருந்து நிலையங்களிலுள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறை, தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியிருக்கிறது. தமிழக அரசு மற்றும் அதிகாரிகளின் மெத்தனத்தால் பாதிக்கப்படுவது பொதுமக்கள் தான் என்பதை எப்போது உணரப்போகிறார்கள் ஆளும் வர்க்கத்தினர் என்று கேள்வியை பொதுமக்கள் எழுப்புகின்றனர். எனவே, கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்மார்களின் நலன்கருதி தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து, தாய்மார்கள் பாலூட்டும் அறையை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். 

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...