2018-19 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மக்களுக்கானது : இந்திய தொழிற்சாலைகளின் கூட்டமைப்பு வரவேற்பு

2018-19 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டானது, பொதுமக்கள் பயனடையும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கோவை மண்டல இந்திய தொழிற்சாலைகளின் கூட்டமைப்பு கூறியுள்ளது.

கோவை : 2018-19 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டானது, பொதுமக்கள் பயனடையும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கோவை மண்டல இந்திய தொழிற்சாலைகளின் கூட்டமைப்பு கூறியுள்ளது. 

இதன் தலைவர் எஸ். நாராயணன் கூறுகையில், இன்று அறிவிக்கப்பட்ட பட்ஜெட், சிறந்த அம்சங்களைக் கொண்டது.  விவசாயம், கல்வி, மருத்துவம் மற்றும் சமூக பாதுகாப்பு போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. சிறு மற்றும் குறு நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வரியால், அவைகள் புத்துயிர் பெற்றுள்ளன. தற்போதைய பட்ஜெட்டின் மூலம் நிதி நிலையைப் பலப்படுத்துவதன் மூலம் எதிர்காலத்தில் முதலீட்டாளர்களிடம் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்ய முடியும்.

பெரும்பாலும் சி.ஐ.ஐ. பரிந்துரை செய்தவை அனைத்தும் தற்போதைய பட்ஜெட்டியில் இடம்பிடித்துள்ளன. குறிப்பாக, வேலைவாய்ப்பை உருவாக்குதல், ஊழியர்களின் பணிநிரந்தரக் காலம் நீட்டிப்பு, கல்வியின் தரம் உயர்த்துதல், ஆசியர்களுக்குப் பயிற்சி மற்றும் மருத்துவத்துறைகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைள், இனிவரும் காலங்களில் பொருளதாராத்தை உயர்த்தக் கூடியதாக இருக்கும். என்றார். 

இதேபோல, கோவை மண்டல இந்திய தொழிற்சாலைகளின் கூட்டமைப்பின் துணைத் தலைவர் எம். ரமேஷ் கூறுகையில், வேலைவாய்ப்பை உருவாக்குதல் மற்றும் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் விதமான நடவடிக்கைகள் போன்ற முயற்சிகளை மேற்கொண்டுள்ள மத்திய அரசை  தொழில்நிறுவனங்கள் பாராட்டுகின்றன.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...