ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்

ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு எதிராக பீட்டா உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

பிப்ரவரி 02

ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு எதிராக பீட்டா உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நிரந்தரமாக நடத்தும் வகையில் தமிழக அரசு சட்டத்திருத்த மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றியது. இதேபோல, கர்நாடகாவில் பாரம்பரியமாக நடத்தப்படும் கம்பளா எனப்படும், எருது பந்தயத்தை தடையின்றி நடத்துவதற்காக அந்த மாநில சட்டமன்றத்தில் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. 

இந்தச் சட்டங்களை எதிர்த்து விலங்குகள் நல அமைப்பான பீட்டா மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி உள்ளிட்ட 2 நீதிபதிகள் கொண்ட அமர்வில் நடைபெற்று வந்தது. விசாரணையின்போது இருதரப்பு வழக்கறிஞர்களும் தங்களது வாதங்களை முன்வைத்தனர். அப்போது, மத்திய அரசின் பொது சட்டங்களை மீறும் வகையில், மாநில அரசுகள் சட்டம் இயற்ற முடியுமா..? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அத்துடன், ஜல்லிக்கட்டு அனுமதியை எதிர்க்கும் மனுக்கள் மீதான விசாரணையை அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்றும் தெரிவித்தனர்.

இந்நிலையில், ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு எதிரான வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த அமர்வானது, ஜல்லிக்கட்டு விவகாரத்தில் கலாச்சார முக்கியத்துவம் மற்றும் தனியாக சட்டம் இயற்றுவதில் மாநில அரசுக்கு உள்ள அதிகாரம் குறித்து முடிவு எடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...