வேளாண் பல்காலையில் பிப்.6-ல் தேனி வளர்ப்பு பயிற்சி முகாம்

கோவை வேளாண்மைப் பலகலைக்கழகத்தில் வரும் 6-ம் தேதி தேனி வளர்ப்பு குறித்து ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

கோவை: கோவை வேளாண்மைப் பலகலைக்கழகத்தில் வரும் 6-ம் தேதி தேனி வளர்ப்பு குறித்து ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. 

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், பூச்சியியல் துறை சார்பாக ஒவ்வொரு மாதமும் தேனீ வளர்ப்பு சம்பந்தமான ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படுகின்றது. இந்தப் பயிற்சி முகாமில் தேனீ இனங்களைக் கண்டுபிடித்தல், பெட்டிகளில் தேனீ வளர்க்கும் முறை, தேனைப் பிரித்தெடுத்தல் உள்ளிட்ட தேனி வளர்ப்பு முறைகள் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படுகின்றது.

அதன்படி, நடப்பு மாதத்திற்கான தேனி வளர்ப்பு பயிற்சி முகாம் வரும் 6-ம் தேதி அப்பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 நடைபெறும் பயிற்சி முகாமில் கலந்து கொள்பவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. ரூ.250 என்ற பயிற்சி கட்டணத்தில் நடத்தப்படும் இதில் கலந்து கொள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் பூச்சியியல் துறையைத் தொடர்பு கொள்ளலாம். 0422-6611214 என்ற தொலை பேசி எண் மூலமாகத் தகவல்களை பெறலாம். 

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...