அன்னூரில் பெண்ணை கொலை செய்த வடமாநில வாலிபர்கள் மேற்குவங்கத்தில் கைது

அன்னூர் அருகே மனைவியை கொன்று நகை பணத்தை கொள்ளையடித்து கணவனுக்கு மின் சாரம் கொடுத்து கொலை செய்ய முயன்ற வட மாநில தொழிலாளர்கள் மேற்கு வங்கத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அன்னூர்: அன்னூர் அருகே மனைவியை கொன்று நகை பணத்தை கொள்ளையடித்து கணவனுக்கு மின் சாரம் கொடுத்து கொலை செய்ய முயன்ற வட மாநில தொழிலாளர்கள் மேற்கு வங்கத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கனுவக்கரை கிராமத்தை சேர்ந்த விவசாயி மயில்சாமி இவரது மனைவி ராஜமணி .இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள் உள்ள நிலையில் இருவரும் தங்கள் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் வீடு விரிவாக்க பணிக்காக பணிகள் மேற்கொண்டு வரும் இவர்களது வீட்டில் டைல்ஸ் ஒட்டும் பணி நடைபெற்று வந்துள்ளது. இதற்காக மூன்று வடமாநில தொழிலாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த 25- ம் தேதி இரவு டைல்ஸ் ஓட்டும் பணியை மேற்கொண்ட வட மாநில தொழிலாளர்கள் மூவரும் வீட்டில் தூங்கி கொண்டிருந்த ராஜாமணி வீட்டின் கதவை தட்டி எழுப்பி குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர்.

தண்ணீர் எடுக்க ராஜாமணி வீட்டினுள் சென்ற போது பின் தொடர்ந்து சென்ற அவர்கள் ராஜாமணியை பயங்கரமாக தாக்கி கொலை செய்துள்ளனர். அவரது அலறல் சப்தம் கேட்டு வந்த ராஜாமணியின் கனவர் மயில்சாமியை கட்டிவைத்து அவருக்கு மின்சாரம் கொடுத்து கொலை செய்ய முயன்றதோடு, வீட்டில் இருந்த நகை பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடினர்.

இந்த கொலையில் ஈடுபட்டவர்களை பிடிக்க கோவை மாவட்ட கண்காணிப்பாளர் மூர்த்தி உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. அந்த தனிப்படை போலீசார் ஈரோடு பகுதியில் விசாரணை மேற்கொண்டனர் அப்போது கிடைத்த தகவலில் அவர்களது பெயர் சாம்ராஜ் , பிந்து , அஜய் என்பதும் அவர்கள் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இந்நிலையில் தப்பிய கொள்ளையர்கள் மேற்கு வங்கத்திற்கு சென்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து செல்போன் மூலம் கொலையாளிகள் இருக்கும் இடத்தை அறிந்த தனிப்படையினர் மேற்கு வங்காளம் சென்று உள்ளூர் போலீசாரின் உதவியுடன் அங்கு பதுங்கி இருந்த மூன்று பேரையும் கைது செய்தனர். அவர்களை நாளை விமானம் மூலம் அழைத்து வர போலிசார் முடிவு செய்துள்ளனர்.

தீரன் பட பாணியில் நடைபெற்ற இந்த கொள்ளை மற்றும் கொலை சம்பவம் கோவை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...