கால்நடை பராமரிப்புத்துறையில் காலியாக உள்ள பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

கால்நடை பராமரிப்புத்துறையில் காலியாக உள்ள 49 கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

கோவை: கால்நடை பராமரிப்புத்துறையில் காலியாக உள்ள 49 கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, கோவை மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையில் பல்வேறு கால்நடை நிலையங்களில் காலியாக உள்ள 49 கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கு தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஊதிய விகிதம் நிலை 2 (ரூ.15900 - ரூ. 50400) ஆகும். 

தகுதிகள் : பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியிருக்க வேண்டும், கால்நடைகளை கையாளத் தெரிந்திருத்தல் வேண்டும், சைக்கிள் ஓட்டத் தெரிந்திருத்தல் வேண்டும். வயது வரம்பு (01.07.2015 அன்றுள்ளபடி) குறைந்தபட்ச வயது 18 ஆகும். அதிகபட்ச வயது தாழ்த்தப்பட்ட வகுப்பு அருந்ததியர், தாழ்த்தப்பட்ட வகுப்பு மற்றும் பழங்குடியினர் வகுப்பினருக்கு 35 வயது, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு, பிற்படுத்தப்பட்ட வகுப்பு, பிற்படுத்தப்பட்ட வகுப்பு, இஸ்லாமிய வகுப்பினருக்கு 32 வயது மற்றும் பொதுப்பிரிவினருக்கு 30 வயது ஆகும். 

மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடம் உச்சவயது வரம்பில் கூடுதலாக வழங்கப்படும் முன்னாள் இராணுவத்தினருக்கு அதிகபட்ச வயது வரம்பு அருந்ததியர், தாழ்த்தப்பட்ட வகுப்பு மற்றும் பழங்குடியினர் வகுப்பினருக்கு 33 வயது, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு, பிற்படுத்தப்பட்ட வகுப்பு, பிற்படுத்தப்பட்ட வகுப்பு இஸ்லாமிய மற்றும் பொதுப்பிரிவினருக்கு 48 வயது ஆகும்.

காலிப்பணியிடங்கள் பெண்கள், முன்னுரிமை பெற்றவர்கள், ஆதரவற்ற விதவை, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் இராணுவத்தினர் ஆகியோரின் விகிதாச்சாரத்தை உள்ளடக்கியதாகும். விண்ணப்பங்கள் coimbatore.tn.nic.in என்ற வலைத்தளத்தில் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 12-ம் தேதி பிற்பகல் 05.45 மணிக்குள், மண்டல இணை இயக்குநர், கால்நடை பராமரிப்புத்துறை, யூனியன் ஹைஸ்கூல் ரோடு, கால்நடை பன்முக மருத்துவமனை வளாகம், கோயம்புத்தூர் 641 001 என்ற முகவரிக்கு நேரடியாகவோ, தபால் மூலமாகவோ அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படும். நேர்காணலில் அதிக மதிப்பெண்கள் பெறும் தகுதியான நபர்கள் இனச்சுழற்சி அடிப்படையில் மாவட்ட ஆட்சியரால் தேர்வு செய்யப்படுவார்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கான நேர்காணல் மாவட்ட அளவில், மாவட்ட ஆட்சியரின் தலைமையில் நடைபெறும். இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...