சான்றிதழ் வழங்க மருத்துவர்கள் அலைக்கழிப்பு : ஆத்திரமடைந்த மாற்றுத்திறனாளிகள் சாலைமறியல்

மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ் வழங்க மருத்துவர்கள் அலைக்கழிப்பதாகக் கூறி திருப்பூர் அரசு மருத்துவமனை முன்பு மாற்றுத்திறனாளிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

திருப்பூர் : மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ் வழங்க மருத்துவர்கள் அலைக்கழிப்பதாகக் கூறி திருப்பூர் அரசு மருத்துவமனை முன்பு மாற்றுத்திறனாளிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.



மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு தேவையான அரசு உதவிகளைப் பெற மருத்துவ சான்றிதழ் அவசியமாகும். திருப்பூர் அரசு மருத்துவமனையில் தமிழக அரசு வழங்கும் மானிய விலையிலான இருசக்கர வாகனம் உள்ளிட்ட அரசு உதவி பெறும் திட்டங்களுக்கான மருத்துவ சான்றிதழ் பெற வந்திருந்த மாற்றுத்திறனாளிகளை அதிகாரிகள் நீண்ட நேரமாக அலைக்கழித்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த மாற்றுத்திறனாளிகள், சான்றிதழ் வாங்க வரும் ஒவ்வொரு முறையும் இதேபோன்று அலைக்கழிப்பதாகக் கூறி, அரசு மருத்துவமனை முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 



இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் மாற்றுத்திறனாளிகளிடம் சமரசம் பேசி மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து, மருத்துவர்கள் நாளை சான்றிதழ் வழங்குவதாக உறுதியளித்ததின் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...