பாரதியார் பல்கலை., துணைவேந்தரிடம் லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் நியமனத்திற்கு லஞ்சம் வாங்கியதாக துணைவேந்தர் கணபதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை : கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் நியமனத்திற்கு லஞ்சம் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து, துணைவேந்தர் கணபதி லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தராக கணபதி, கடந்த 17.03.2016 ல் துணை வேந்தராக நியமனம் செய்யப்பட்டார். அப்போது, பாரதியார் பல்கலைக்கழக பல்வேறு துறைகளில் 82 பணியிடங்கள் நிரப்ப அந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிவிப்பு வெளியானது. இதைத்தொடர்ந்து, இந்தப் பணியிடங்களுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். நேர்முகத் தேர்வில் முன்னுக்குப் பின் முரணான தேதிகள் அறிவித்ததால், அப்போதே முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆளுநர், உயர்கல்வி செயலர் ஆகியோருக்குப் புகார்கள் தெரிவிக்கப்பட்டன. ஒரு பணியிடத்துக்கு பல லட்சங்கள் பெறப்பட்டதாக கூறப்பட்டது. அதையும் மீறி நவம்பர் மாதம் பணியிடங்கள் நிரப்பப்பட்டன.

பணி நியமனம் வழங்கும் முன்பாக, அதை நிறுத்தி வைக்க உயர் கல்வித்துறை கடிதம் அனுப்பியது. ஆனால், அதையும் மீறி நியமன ஆணை வழங்கப்பட்டது. இதையடுத்து, அப்போதைய பதிவாளர் மோகன், துணைவேந்தர் இருவரும் மாறி மாறி புகார்களை தெரிவித்துக் கொண்டனர். இதனால், மோகன் பதிவாளர் பொறுப்பிலிருந்து விலகினார். பின்னர், வனிதா என்பவர் பதிவாளராக நியமிக்கப்பட்டார். பல்வேறு தரப்பில் இருந்தும் துணை வேந்தருக்கு எதிர்ப்பு எழுந்தது. பேராசியர்கள் தரப்பிலிருந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதனிடையே, கோவை நவாவூரை சேர்ந்த லட்சுமிபிரபா பணியிட நியமன முறைகேடு தொடர்பாக உயர்கல்வித்துறை, ஆளுநர் உள்ளிட்டோருக்கு மனு அனுப்பியினார். அவரது கணவர் 1978-ல் பல்கலைக்கழகத்துக்கு நிலம் வழங்கியதன் பேரில் ஓட்டுநர் வேலை பெற்றார். லட்சுமி பிரபாவின் புகாரை அடுத்து அவரது கணவர் வேலை நீக்கம் செய்யப்பட்டார். தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய அறிவுறுத்தலின் பேரில் துணைவேந்தர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், உதவி பேராசிரியர் பணி நியமனத்துக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கேட்டதாக பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி மீது சுரேஷ் என்பவர் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரை அடுத்து கோவையில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சுரேஷிடம் இருந்து ரூ.1 லட்சம் ரொக்கமாகவும், எஞ்சிய ரூ.29 லட்சத்தை காசோலையாகவும் துணைவேந்தர் கணபதி பெற்றதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் லஞ்ச ஒழிப்புதுறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...