திருச்சி - சேலம் இடையே பயணிகள் சிறப்பு ரயில் அறிவிப்பு

ரயில் பயணிகளின் கோரிக்கையை ஏற்று திருச்சி மற்றும் சேலம் மாவட்டங்களுக்கு இடையே பயணிகள் சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில் பயணிகளின் கோரிக்கையை ஏற்று திருச்சி மற்றும் சேலம் மாவட்டங்களுக்கு இடையே பயணிகள் சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக சேலம் பிராந்திய ரயில்வே மேலாளர் ஸ்ரீ ஹரி சங்கர் கூறுகையில்,  திருச்சி, சேலம் மாவட்டங்களுக்கு இடையே பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. வரும் 5-ம் தேதி முதல் இயக்கப்படும் இந்த ரயில்சேவையானது, ஞாயிற்றுக்கிழமையைத் தவிர வாரத்தின் 6 நாட்கள் இயக்கப்பட உள்ளன. திருச்சி - கரூர் பயணிகள் ரயில் நாமக்கல் வழியாக சேலம் வரை இயக்கப்படுகிறது. இந்த ரயில்சேவை சோதனை ஓட்டமாக 3 மாத காலம் செயல்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு கூறினார். 

திருச்சி - சேலம் இடையே ரயில்சேவை:

திருச்சி - கரூர் பயணிகள் ரயில் (எண் - 76833) (நீட்டிக்கப்பட்ட சேவை) :  திருச்சியில் இருந்து புறப்படும் நேரம் காலை 09.35 மணி. கரூர் சென்றடையும் நேரம் காலை 11.35 மணி.

கரூர் - சேலம் சிறப்பு பயணிகள் ரயில் (எண் - 06833) : கரூரில் இருந்து புறப்படும் நேரம் காலை 11.40. சேலத்திற்கு சென்றடையும் நேரம் பிற்பகல் 01.20 மணி.

சேலம் - திருச்சி இடையேயான ரயில்சேவை:

சேலம் - கரூர் பயணிகள் சிறப்பு ரயில் (எண் - 76833) : சேலத்தில் இருந்து புறப்படும் நேரம் பிற்பகல் 01.30 மணி. கரூர் சென்றடையும் நேரம் பிற்பகல் 03.20 மணி.

கரூர் - திருச்சி சிறப்பு பயணிகள் ரயில் (எண் - 06833) (நீட்டிக்கப்பட்ட சேவை): கரூரில் இருந்து புறப்படும் நேரம் மாலை 03.30 மணி. திருச்சிக்கு சென்றடையும் நேரம் மாலை 05.35 மணி.

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....