மூலிகை மருந்துகளைப் பயன்படுத்தும்போது பக்க விளைவுகள் மிகக்குறைவு

மூலிகை மருந்துகளைப் பயன்படுத்ததினால் பக்க விளைவுகள் மிகக்குறைவு என நீலகிரியில் உள்ள மத்திய ஓமியோபதி ஆய்வு மையத்தின் தாவரவியல் வல்லுநர் எஸ்.ராஜன் தெரிவித்தார்.


நீலகிரி: மூலிகை மருந்துகளைப் பயன்படுத்ததினால் பக்க விளைவுகள் மிகக்குறைவு என நீலகிரியில் உள்ள மத்திய ஓமியோபதி ஆய்வு மையத்தின் தாவரவியல் வல்லுநர் எஸ்.ராஜன் தெரிவித்தார். 

நீலகிரி மாவமலையில் சுமார் 3,000 வகையான பூக்கும் தாவரங்களில் 1,500-க்கும் மேற்பட்டவை மருத்துவ குணம் வாய்ந்த மூலிகைகள் உள்ளன. இது குறித்து ஆய்வு செய்ய இந்தியாவிலேயே உதகை அருகே எமரால்டு பகுதியில் மத்திய ஓமியோபதி ஆய்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில், ஓமியோபதி மருத்துவத்துக்கான மூலிகைகள் சுமார் 60 ஏக்கரில் 100-க்கும் மேற்பட்ட மூலிகைகள் வளர்க்கப்பட்டு, ஆய்வு நடத்தப்படுகிறது.



ஓமியோபதி மருத்துவத்தில் 70 சதவீத மருந்துகள் மூலிகைகளிலிருந்து தயாரிக்கப்படுவதாக இந்த மையத்தில் தாவரவியல் வல்லுநராகப் பணியாற்றி வரும் டாக்டர் எஸ்.ராஜன் கூறுகிறார். இது தொடர்பாக மேலும் அவர் பேசுகையில், பழங்கால மனிதர்கள் பல்வேறு நோய்களுடன் போராட வேண்டியிருந்த சூழலில் அவற்றைப் போக்குவதற்கான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்ட வேண்டியதன் அவசியமும் உருவாக்கியது. இதன் காரணமாகவே மூலிகைகளை மருந்தாகவே பயன்படுத்தினர். இதனாலேயே தற்போது உலகில் நாம் பயன்படுத்தும் முக்கியமான மருந்துகள் உலகின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள பழங்குடியினர் பயன்படுத்திவரும் மூலிகைகளிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டவையேயாகும்.

இந்தியாவின் பழங்கால மருத்துவமுறைகள் குறித்து கி.மு. 4500-1200 வரையான கால கட்டத்தில் ரிக் வேதத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பழங்கால மருத்துவ முறை கடந்த 16-ம் நூற்றாண்டிலிருந்து போர்ச்சுக்கீசியரால் ஆய்வுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளது. அதன்பின்னர் இதன் விபரங்கள் கடந்த 1563-ம் ஆண்டிலிருந்து புத்தகங்களாகவும் வெளியிடப்பட்டன. உலக சுகாதார மையத்தின் அறிக்கையில் உலக மக்கள் தொகையில் 80 சதவீதத்தினர் மூலிகை மருத்துவத்தையே நம்பியுள்ளதாகவும், இத்தகைய பழங்கால மருத்துவம் எத்தகைய வரைமுறையிலும் இல்லாத ஒன்று எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தியாவைப் பொறுத்தமட்டில் 618 வகைகளில் 76 பிரிவுகளைச் சேர்ந்த மிகவும் பின்தங்கிய பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் தமிழகத்திலுள்ள 38 வகையான பழங்குடியினரில் 6 பிரிவினர் நீலகிரி மாவட்டத்தில் வசிக்கின்றனர். இதற்கு இம்மலை மாவட்டத்தில் நிலவும் வெப்ப, மிதவெப்ப மற்றும் குளிர் பிரதேசம் ஆகிய 3 வகையான காலநிலைகளே காரணமாகும்.

பழங்கால மருத்துவ முறை மந்திரம், மதம் சார்ந்த நம்பிக்கைகள் மற்றும் மருந்து ஆகிய மூன்று தத்துவங்களை உள்ளடக்கியதாகும். பனியர்கள் 89 வகையான மூலிகைகளை 121 வகையான நோய்களைக் குணப்படுத்த பயன்படுத்துகின்றனர். இதில், குறிப்பிடத்தக்க மருத்துவ குணம் கொண்டவையாக பாம்புக்கடிக்கு விஷ முறிவாக 10 வகையான மூலிகைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆஸ்துமா மற்றும் அலர்ஜி தொடர்பான நோய்களுக்கு 3 வகையான மூலிகைகளையும், மனித குலத்திற்கே உரிய சாதாரண நோய்களான சளி, இருமல், தலைவலி மற்றும் காய்ச்சல் போன்றவற்றிற்கு 48 வகையான மூலிகைகளை பயன்படுத்துகின்றனர்.

மூலிகைகளிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகளில் குனைன் மற்றும் ஆர்ட்டிமிசினின் ஆகியவை மலேரியா காய்ச்சலைக் குணமாக்குவதற்கும், எபிடிரின், அட்ரோபின் போன்றவை மயக்க மருந்துகளாகவும் கொக்கைன் ஊக்க மருந்தாகவும் டிஜாக்சின் இருதய நோய் தொடர்பாகவும் ரிசர்பைன் இரத்த அழுத்த நோய்க்கும் முக்கிய மருந்துகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அழிந்துவரும் நிலையிலுள்ள இந்தப் பழங்குடியின மருத்துவ முறைகளைப் பாதுகாத்து அவற்றைப் பயன்படுத்தி மீண்டும் உபயோகப்படுத்த வழிமுறைகளை ஏற்படுத்தித் தர வேண்டும். ஆங்கில மருத்துவ முறையில் உட்கொள்ளும் மருந்துகளால் அதிகளவில் பக்க விளைவுகளும் ஏற்படுவதாகவும், மூலிகை மருந்துகளைப் பயன்படுத்தும்போது பக்க விளைவுகள் மிகக்குறைவு எனவும், அதனால் மக்கள்  சாதாரண நோய்களுக்கு மூலிகை மருந்துகளையே பயன்படுத்தி தங்களது உடலில் நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரித்துக் கொள்ளலாம், என்றார்.

நீலகிரி மாவட்டத்தில் நிலவி வரும் காலநிலை காரணமாக திறந்த வெளியில் பயிரிடப்படும் மூலிகைகள் பனி, மழை மற்றும் வெயிலால் பாதிக்கப்படுவதால், தற்போது இந்த மையத்தில் நவீன பசுமை குடில் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வெப்பமான மற்றும் மித வெப்பமான காலநிலையில் வளரும் மூலிகைகளை வளர்க்க வழிவகை ஏற்பட்டுள்ளது. வெப்பம் அதிகரித்தால், குளிரூட்டவும் இந்த பசுமை குடிலில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

இந்தியாவிலேயே ஓமியோபதி மருத்துவத்துக்கான மருந்துகளுக்கான மூல பொருளான மூலிகைகள் இந்த மையத்தில் வளர்க்கப்பட்டு, ஆய்வு செய்யப்படுகிறது. இது குறித்து ஆய்வு செய்ய பல்வேறு நாடுகளிலிருந்து ஆராய்ச்சி மாணவர்கள் இந்த மையத்துக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....