வெள்ளலூர் குளக்கரையில் மியாவாக்கி முறையில் மரங்களை நட்ட கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் சார்பில் இன்று வெள்ளலூர் குளக்கரையில் மியாவாக்கி முறையில் ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

கோவை: கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் சார்பில் இன்று வெள்ளலூர் குளக்கரையில் மியாவாக்கி முறையில் ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. 



வெள்ளலூர் குளக்கரையை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், குளத்தைச் சுற்றியுள்ள கரைப் பகுதியில் அடர்த்தியான முறையில் மரங்களை வளர்க்கும் மியாவாக்கி முறையில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.



கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் தன்னார்வளர்கள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் குளக்கரையை சுற்றி 1000 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.



இது குறித்த ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், "மியாவாக்கி முறையில் குளத்தைச் சுற்றிலும் மரக்கன்றுகளை நடவு செய்யும் போது நிலத்தடி நீர்மட்டமானது உயர்கிறது. குளத்தை நம்பி உயிர்வாழும் பூச்சிகளுக்கும், பறவைகளுக்கும் இது உறைவிடமாக அமையும்" என்றனர். 

இந்த நிகழ்ச்சியில், சமூக ஆர்வளர் A.P.அன்பரசன், கோயம்புத்தூர் ரோட்டரி கிளப்பை சேர்ந்த C.R.துரை ராஜ், வெள்ளலூர் பஞ்சாத்தின் முன்னாள் தலைவர் மருதாச்சலம், சிறுதுளி அமைப்பைச் சேர்ந்த மணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....