பசுந்தேயிலைக்கு ஆதார விலை நிர்ணயிக்க கோரி நீலகிரி மாவட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பசுந்தேயிலைக்கு ஆதார விலை நிர்ணயிக்க கோரி நீலகிரி மாவட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நீலகிரி மாவட்ட விவசாயிகள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



நீலகிரி: பசுந்தேயிலைக்கு ஆதார விலை நிர்ணயிக்க கோரி நீலகிரி மாவட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நீலகிரி மாவட்ட விவசாயிகள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

நீலகிரி மாவட்டத்தில் 15 அரசு கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் உள்ளன. இதில் கடந்த 4 மாதங்களாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.37 கோடி நிலுவை தொகையை வழங்கக் கோரியும், பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலையாக ஒரு கிலோவிற்கு 30 ரூபாய் நிர்ணயம் செய்ய வலியுறுத்தியும் நீலகிரி மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். 

இந்நிலையில், கோரிக்கைகளை வலியுறுத்தி உதகை அருகேயுள்ள இத்தலார் கிராமத்தில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்துக்கு, சிறு தேயிலை விவசாயிகள் சங்க தலைவர் ஜே.பி.சுப்ரமணியம் தலைமை வகித்தார். என்.ஆர்.சுரேஷ், ஐ.ஆர்.மூர்த்தி, பேலிதளா கிராம தலைவர் அர்ஜூணன், இத்தலார் ஊர்த் தலைவர் கே.ஜே.ராமன், போர்த்தி தலைவர் குண்ணன், பெம்பட்டி தலைவர் லட்சுமணன், புதுஹட்டி தலைவர் சந்திரன் ஆகியோரது முன்னிலையில் ஐந்து கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான சிறு தேயிலை விவசாயிகள் பங்கேற்றனர். இவர்களுக்கு ஆதரவாக இத்தலார் கிராமத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...