வேளாண்., பொறியியல் துறையில் தற்காலிக தொழிற்பழகுநர்கள் பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

வேளாண்மை பொறியியல் துறையில் தற்காலிகமாக ஒருவருட பயிற்சி காலத்திற்கு தொழிற்பழகுநர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதால் தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்டம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


கோவை: வேளாண்மை பொறியியல் துறையில் தற்காலிகமாக ஒருவருட பயிற்சி காலத்திற்கு தொழிற்பழகுநர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதால் தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்டம் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தெரிவிக்கையில், கோவை மாவட்ட வேளாண்மை பொறியியல் துறையில், உதவி செயற்பொறியாளர் இயந்திர கலப்பை பணிமனை, கோவை அலுவலகத்தின் பணிமனையில் அரசு அங்கீகாரம் பெற்ற அரசினர் தொழிற்பயிற்சி மையத்தில் பயின்று தேர்ச்சி பெற்ற நபர்கள் தற்காலிகமாக ஒருவருட பயிற்சி காலத்திற்கு தொழிற் பழகுநர்களாக தேர்வு செய்யப்பட உள்ளனர். 

வெல்டர்-2 எண்கள், பிட்டர்-2 எண்கள் மற்றும் டிராக்டர் மெக்கானிக்-1 எண் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தங்கள் பெயர், கல்வித்தகுதி ஆவணங்கள் (நகல்), முகவரி, புகைப்படத்துடன் கூடிய விபரங்களைப் பூர்த்தி செய்து விண்ணப்பத்தை ஆதார் அட்டை அல்லது குடும்ப அட்டை ஒளிம நகலுடன் சுயவிலாசமிட்ட அஞ்சல் உறையில் உதவி செயற்பொறியாளர் வேளாண்மை பொறியியல் துறை, இயந்திர கலப்பை பணிமனை, மருதமலைரோடு, கோவை - 641003 என்ற முகவரிக்கு வரும் 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும், அரசால் மேற்குறித்த பிரிவுகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட பயிற்சி கால ஊக்கத்தொகை மாதந்தோறும் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும், என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...