அம்மனுக்கு சுடிதார் அலங்காரம் செய்த குருக்கள் சஸ்பெண்ட்

நாகை மாவட்டத்தில் அபயாம்பிகை அம்மனுக்கு சுடிதார் வேடம் அணிந்தது போன்று, அலங்காரம் செய்த 2 குருக்கள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

நாகை மாவட்டத்தில் அபயாம்பிகை அம்மனுக்கு சுடிதார் வேடம் அணிந்தது போன்று, அலங்காரம் செய்த 2 குருக்கள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 

நமது கலாச்சாரத்தின்படி, புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் கடவுள் என்றால் சீலை மற்றும் நகைகளை அணிந்தவாறு தோற்றத்துடன் இருப்பதுதான் ஐதீகம். இந்த நிலையில், மயிலாடுதுறையில் உள்ள மாயூரநாதர் கோவிலில் அபயாம்பிகை அம்மன் சன்னதி உள்ளது. 

இந்த அம்மனுக்கு, கோவிலின் குருக்கள் சுடிதார் அலங்காரம் செய்துள்ளனர். இதனை, கோவிலுக்கு வந்த பக்தர்கள் புகைப்படம் எடுத்து, சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இதற்கு, பல்வேறு தரப்பினர் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். 

இதையடுத்து கோவிலை நிர்வகித்து வரும் திருவாவடுதுறை ஆதீனம், ராஜ், கல்யாணம் ஆகிய இரண்டு குருக்களையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆகம விதிகளை மீறி இருவரும் செயல்பட்டு உள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. 

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...