தமிழக முதல்வர் எனக்கு துரோகம் செய்துவிட்டார் : அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., குமுறல்

அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதன் மூலம் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் தனக்கு துரோகம் செய்துவிட்டதாக அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ. குற்றம் சாட்டியுள்ளார்.


கோவை: அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதன் மூலம் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் தனக்கு துரோகம் செய்துவிட்டதாக அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ. குற்றம் சாட்டியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எந்தக் காரணமும் சொல்லாமல் என்னை அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பதவியில் இருந்து நீக்கி விட்டனர். என்னை ஏன் நீக்கினார்கள் என தெரியவில்லை. கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர் செல்வமும் எனக்கு துரோகம் செய்து விட்டனர். 10 ஆண்டுகள் தொழிற்சங்க செயலாளராக இருந்து 10 லட்சம் உறுப்பினர்களை அ.தி.மு.க. தொழிற்சங்கத்தில் சேர்த்துள்ளேன். 14 கோடி ரூபாய் தொழிற்சங்க கணக்கில் நிதி சேர்த்துக்கொடுத்துள்ளேன். ஆனால், எந்த விளக்கமும் கேட்காமல் என்னை நீக்கியுள்ளனர். இது தொடர்பாக,கட்சி தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளேன். 

சென்னைக்குச் சென்று சிலரைச் சந்தித்த பின்னர் அடுத்தகட்ட முடிவெடுக்க இருக்கிறேன். கடந்த வெள்ளிக்கிழமை மாலை அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பொறுப்பில் இருந்து சின்னச்சாமி விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...