கோவையில் டிப்பர் லாரி மோதி பெண் பலி : வீடியோ இணைப்பு

கோவை அருகே டிப்பர் லாரி மோதியதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான இந்த விபத்து காட்சி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கோவை : கோவை அருகே டிப்பர் லாரி மோதியதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான இந்த விபத்து காட்சி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கருமத்தம்பட்டியில் இன்று காலை சாலையை கடக்கும் போது லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் திருநெல்வேலி ரெட்டியார்பட்டியைச் சேர்ந்த சந்திரா என்ற பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ளது. அந்தப் பெண் சாலையை கடக்க நிற்பதும், சர்வீஸ் ரோடு என்பதால் ஒரு வழிப்பாதை இரு வழியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்த வழியாக வரும் டிப்பர் லாரி அந்த பெண் மீது மோதி செல்வதும் பதிவாகியுள்ளது.

ஏற்கனவே, கருமத்தம்பட்டி நான்குமுனை சந்திப்பில் சாலை குறுகியதே விபத்திற்கு காரணம் எனவும், இதனால், காலை, மாலையில் செல்லும் பள்ளி கல்லூரி, மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், சாலை குறுகியதன் காரணமாக கடந்த மாதம் ஏற்பட்ட விபத்தில் இரண்டு குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், உடனடியாக சாலையை விரிவாக்கம் செய்யாவிட்டால் போராட்டம் நடத்தப்போவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...