ரயில்வே துறையில் நடக்கும் லஞ்சம் மற்றும் ஊழலைத் தடுக்க நடவடிக்கை : சிறப்பு தொலைபேசி எண்கள் அறிவிப்பு

ரயில்வேத்துறையில் நடக்கும் லஞ்சம் மற்றும் ஊழல் புகார்களை தெரிவிக்க சிறப்பு தொலைபேசி எண்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில்வேத்துறையில் நடக்கும் லஞ்சம் மற்றும் ஊழல் புகார்களை தெரிவிக்க சிறப்பு தொலைபேசி எண்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

இந்திய ரயில்வே தனது ஊழியர்களிடையே நேர்மை நிலவுவதை உறுதி செய்யும் வகையில், பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது. சமூக ஊடகங்கள் மூலமாகவும், ஊடக விளம்பரங்கள் மூலமாகவும் தனது எந்தஒரு மட்டத்தில் இருக்கும் ஊழியரும் ஊழல் மற்றும் லஞ்ச நடவடிக்கைகளில் ஈடுபட்டால் உடனடியாக அது குறித்து புகார் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்வதுடன், இத்தகு புகார்களைத் தெரிவிக்க சிறப்பு தொலைபேசி எண்களையும் ஏற்பாடு செய்துள்ளது. தெற்கு ரயில்வேயில், ரயில்வே ஊழியர்கள் பற்றிய லஞ்ச மற்றும் ஊழல் புகார்களை விஜிலன்ஸ் துறை உதவி எண் 155210 மூலமாகவோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ தெரிவிக்கலாம்.   

2018 பிப்ரவரி முதல் தேதி துவங்கி தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் தனது கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து ரயில்நிலையங்கள் மற்றும் பணியிடங்களில் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா. கண்காணிப்பில் சிறப்பு கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, ரயில் நிலையங்கள், ரயில்கள், ரயில்வே அலுவலகங்கள், பார்சல் அலுவலகங்கள், முன்பதிவு அலுவலகங்கள், உணவகங்கள், போன்ற இடங்களில் சேலம் கோட்ட முதுநிலை வணிக மேலாளர் விஜுவின், உதவி ரயில்வே பாதுகாப்புப் படை ஆணையர் எம். சிவதாஸ், உதவி வணிக மேலாளர் எம். ஷாஜஹான் ஆகியோர் தலைமையிலான சிறப்புப் படையினர் திடீர் பரிசோதனைகள் மேற்கொண்டனர். இதில், அனுமதியின்றி உணவுப் பொருட்கள் விற்ற பலபேர் பிடிபட்டதுடன், அவர்கள் விற்ற உணவுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.  

ரயில் பயணிகளிடையே இது குறித்து உரையாடிய சேலம் கோட்ட மேலாளர் விஜிலன்ஸ் உதவி தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தி சேலம் கோட்டத்தில் நடைபெறும் எந்த ஒரு ஊழல் மற்றும் லஞ்ச நிகழ்வுகள் பற்றி புகார் கொடுக்க முன்வருமாறு கேட்டுக் கொண்டதுடன், அத்தகு புகார்கள் நிரூபிக்கப்பட்டால், தக்க தண்டனை சம்பந்தப்பட்ட ரயில்வே ஊழியருக்கு வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.  இத்தகு சிறப்பு விஜிலன்ஸ் விழிப்புணர்வு நிகழ்வுகள் சேலம் கோட்டத்தில் தொடர்ந்து நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....