ஈரானில் நடந்த ஆசிய தடகளப் போட்டியில் பதக்கம் வென்ற திருப்பூரை சேர்ந்த தடகள வீரர்

ஈரானில் நடைபெற்ற ஆசிய அளவிலான உள் அரங்க தடகள போட்டியில் தமிழக மாணவர் வெள்ளி பதக்கம் வென்றார்.


கோவை: ஈரானில் நடைபெற்ற ஆசிய அளவிலான உள் அரங்க தடகள போட்டியில் திருப்பூரை சேர்ந்த தடகள வீரர் வெள்ளி பதக்கம் வென்றார். 



ஆசிய அளவிலான உள் அரங்கத்  தடகள போட்டிகள் ஈரான் நாட்டில் கடந்த 1-ம் தேதி முதல் 3-ம் தேதி நடைபெற்றது. இதில், 40-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். பல்வேறு போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்தியாவில் இருந்து 18 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

இதில் திருப்பூர் மாவட்டம் கள்ளப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஏழைத் தொழிலாளி கனகராஜ் என்பவரது மகன் கமல்ராஜ் கலந்து கொண்டு டிரிபிள் ஜம்ப் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றார். இப்போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளார் கமல்ராஜ்.



அடுத்து இந்தோனேசியாவில் நடைபெறும் தடகள போட்டியில் பங்கேற்பதற்காக தயாராகிக் கொண்டிருக்கும் இந்த வெற்றி நாயகனைத் தொடர்பு கொண்டு பேசினோம். பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்த அவர் தனது அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார். " சாதாரண குடும்பத்தில் பிறந்த நான் அரசு அரசு பள்ளியில் பயின்றேன். நீளம் தாண்டுதல் விளையாட்டில் ஆர்வத்துடன் விளையாடிய போது பள்ளியின் உடற் கல்வி ஆசிரியர் மோகன் எனக்கு டிரிபிள் ஜம்ப் விளையாட்டை கற்றுக் கொடுத்தார்.



10-ம் வகுப்பு படிக்கும் போது நடைபெற்ற குறுமைய்ய அளவிலான டிரிபிள் ஜம்ப் போட்டியில் பங்கேற்று தங்கம் வென்றேன். அந்த முதல் பதக்கமே இவ்விளையாட்டின் மீதான எனது ஆர்வத்தைத் தூண்டியது. தொடர்ந்து மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றேன்.

பின்னர்,கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வந்த எனக்கு 'அச்சீவர் அதலெடிக் அகாடமி' என்ற பயிற்சி மையத்தின் தொடர்பு கிடைத்தது. அங்கு பயிற்சியாளர் முகமது நிசாமுதீன் என்பவரின் கீழ் டிரிபிள் ஜம்ப் விளையாட்டு பயிற்சி பெற்றேன். அதன் மூலமாகவே தற்போது வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது.



சர்வதேச போட்டிகளில் முதல் முறையாக பங்கேற்றதால் சிறிது தடுமாற்றம் ஏற்பட்டது. அதனாலேயே தங்கம் வெல்லும் வாய்ப்பைத் தவறவிட்டேன். இருப்பினும் நாட்டிற்காக வெள்ளி பதக்கம் வென்றது பெருமையாக உள்ளது. 

வரும் 8- ம் தேதி இந்தோனேசியாவில் நடைபெறும் போட்டியில் நிச்சயம் தங்கம் வெல்ல முயற்சிப்பேன். நாட்டிற்காகச் சர்வதேச அரங்கில் தங்கம் வெல்வதே தனது லட்சியம்" என்று பெருமிதம் தெரிவித்தார். 

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....