மின் கம்பத்தை கயிறு கட்டி தாங்கி நிறுத்திய மின்வாரியம்: அச்சத்தில் பொதுமக்கள்

மின் கம்பத்தை அருகில் இருக்கும் கட்டிடத்தோடு கட்டி வைத்துப் பராமரித்து வருகிறது தமிழ மின்வாரியம்.


கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் டி.பி சாலையில் தனியாருக்கு சொந்தமான சீட்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் முன் பகுதியில் மின் கம்பம் ஒன்று உள்ளது. பழுதடைந்த நிலையில் உள்ள இந்த மின்கம்பம் கடந்த சில நாட்களாகச் சாய்ந்த நிலையில் இருந்தது. இதனைத்தொடந்து, அந்த மின் கம்பத்தை அருகில் இருக்கும் கட்டிடத்தோடு கட்டி வைத்துப் பராமரித்து வருகிறது தமிழக மின்வாரியம்.



அப்பகுதியில் நடைபாதை வழியாக செல்லும் பொதுமக்கள் 'கரணம் தப்பினால் மரணம்' என்ற அச்சத்தில் இதனைக் கடந்து சென்று வருகின்றனர். 



பொதுமக்கள் அதிகமாக உபயோகப்படுத்தும் இது போன்ற பகுதிகளில் பழுதடைந்த மற்றும் விழப்போகும் தருவாயில் உள்ள மின் கம்பங்களை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். 

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...