அனைத்து கட்சி சார்பில் மாவட்ட தலைநகரங்களில் கண்டன கூட்டம்

பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து வரும் 13-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் அனைத்து கட்சி சார்பில் கண்டன கூட்டம் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து வரும் 13-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் அனைத்து கட்சி சார்பில் கண்டன கூட்டம் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுவதாக கடந்த மாதம் (ஜனவரி) 19-ந் தேதி அரசு அறிவித்தது. இந்தக் கட்டண உயர்வு 20-ந் தேதி முதல் நடைமுறைக்கும் வந்தது. ஆனால், அபரிமிதமான கட்டண உயர்வு என்று பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டன. பேருந்து கட்டண உயர்வைக் குறைக்க வலியுறுத்தி தி.மு.க. சார்பில் 27-ந் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டமும், 29-ந் தேதி மறியல் போராட்டமும் நடைபெற்றது. 

இந்த நிலையில், பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக, அடுத்தகட்ட போராட்டம் குறித்து முக்கிய முடிவு எடுப்பதற்காக தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 10 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் காங்கிரஸ் ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட்டுகள் உள்ளிட்ட கட்சிகள் இதில் கலந்து கொண்டனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அபுபக்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டம் முடிந்ததும் தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, அவர் பேசுகையில், சென்னையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக மாவட்ட தலைநகரங்களில் வரும் 13-ம் தேதி கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும். சிறையில் உள்ள மாணவர்கள், பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து போராடி கைதானவர்களை விடுதலை செய்ய வேண்டும். கைது செய்யப்பட்டவர் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். 

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...